ஒரு முறை இப்படி பன்னீர் பிரியாணி செய்தால் போதும், செம்ம சுவையா இருக்கும்
தேவையான பொருட்கள்
200 கிராம் பன்னீர்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
அரை ஸ்பூன் மஞ்சள் பொடி
1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
2 பட்டை, 2 கிராம்பு, 2 ஏலாக்காய்
2 பிரியாணி இலை
4 ஸ்பூன் எண்ணெய்
கால் ஸ்பூன் மஞ்சள் பொடி
2 ஸ்பூன் மிளகாய் பொடி
1 ஸ்பூன் மல்லிப் பொடி
அரை ஸ்பூன் சீரகப் பொடி
உப்பு
3 கேரட்
4 பீன்ஸ்
3 பச்சை மிளகாய்
1 கை புதினா
1 கை கொத்தமல்லி
1 கை பிடி முந்திரி பருப்பு
2 ஸ்பூன் தயிர்
1 கப் பாஸ்மதி அரிசி
அரை ஸ்பூன் பட்டர்
செய்முறை: ஒரு பாத்திரத்தில், பட்டர் சேர்த்து அதில் பன்னிரை சதுரங்களாக வெட்டி சேர்த்து மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி,சீரகப் பொடி, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி, முந்திரி பருப்பு சேர்த்து நன்றாக கிளர வேண்டும். தொடர்ந்து இதில் உப்பு, முந்திரி, ஊறவைத்த பாஸ்மதி அரிசி, தயிர், புதினா, கொத்தமல்லி, பன்னீர் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுத்தால் பன்னீர் பிரியாணி ரெடி.