ஒரு முறை சில்லி பன்னீர் பிரைடு ரைஸ் சமைத்து பாருங்க. எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
தேவையான பொருட்கள்
200கிராம் பன்னீர்
கால் ஸ்பூன் மஞ்சள் தூள்
அரை ஸ்பூன் மிளகாய் தூள்
அரை ஸ்பூன் மல்லி தூள்
கால் ஸ்பூன் கரம் மசாலா
கான்பிளவர் 1 ஸ்பூன்
அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
உப்பு தேவையான அளவு
அரை ஸ்பூன் அளவு எண்ணெய்
பொறிக்கும் அளவு எண்ணெய்
1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
1 கேரட் நறுக்கியது
வேக வைத்த அரிசி 1 கப்
1 ஸ்பூன் தக்காளி சாஸ்
1 ஸ்பூன் சில்லி சாஸ்
1 ஸ்பூன் சோயா சாஸ்
1 ஸ்பூன் மிளகாய் பொடி
கால் ஸ்பூன் கரம் மசாலா
கொத்தமல்லி நறுக்கியது கொஞ்சம்
செய்முறை: பன்னீரை சின்ன சின்ன க்யூப் வடிவத்தில் நறுக்கவும். தொடர்ந்து அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லிப் பொடி, கான்பிளவர், கரம் மசாலா, இஞ்சி- பூண்டு விழுது, உப்பு, எண்ணெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும். தொடர்ந்து இதை எண்ணெய்யில் போட்டு பொறித்தி எடுக்கவும். பொறித்து எடுத்ததும். அதே எண்ணெய்யில் வெங்காயம், கேரட், உப்பு சேர்த்து வதக்கவும். காய்கறி பாதி வெந்ததும் வேக வைத்த அரிசி, தக்காளி சாஸ், சோயா சாஸ், மிளகாய் பொடி, கரம் மசாலா சேர்த்து கிளரவும். வறுத்த பன்னீரை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து கொத்தமல்லியை சேர்த்து கிளரவும். சூப்பரான சில்லி பன்னீர் பிரைடு ரைஸ் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“