ஒரு முறை இப்படி பன்னீர் கிரேவி டிரை பன்னுங்க. செம்ம ருசியான ரெசிபி இது.
தேவையான பொருட்கள்
2 பெரிய வெங்காயம்
10 முந்திரி பருப்பு
உப்பு
2 தக்காளி
3 ஸ்பூன் எண்ணெய்
1 ஸ்பூன் பட்டர்
அரை ஸ்பூன் சோம்பு
பிரிஞ்சி இலை
ஒரு துண்டு பட்டை
அன்னாசிப் பூ
2 ஸ்பூன் மிளகாய் தூள்
1 ஸ்பூன் மல்லித்தூள்
கரம் மசாலா அரை ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்
1 பெரிய கரண்டி தயிர்
பன்னீர் 150 கிராம்
செய்முறை: ஒரு பாத்திரத்தில் பெரிய வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். அதில் முந்திரி சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து வெங்காயத்தை வதக்கவும். இதைத்தொடர்ந்து மிக்ஸியில் தக்காளியை அரைத்துகொள்ளவும். தொடர்ந்து வதங்கிய வெங்காயம், முந்திரியை சேர்த்து தனியாக அரைத்துகொள்ளவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும், அதில் பட்டர் சேர்த்துக் கொள்ளவும். தொடர்ந்து அதில் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, அன்னாசிப் பூ சேர்க்கவும். தொடர்ந்து அதில் வெங்காயம் அரைத்ததை சேர்க்கவும். இதை 3 நிமிடம் வேகவிடவும். தொடர்ந்து தக்காளி அரைத்ததை சேர்த்து கொள்ளவும். இதைத்தொடர்ந்து மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும். தொடர்ந்து இதை நன்றாக வதக்கவும். 7 முதல் 8 நிமிடங்கள் மூடி போட்டு மூடவும். தொடர்ந்து இதில் தயிர் சேர்த்துகொள்ளவும். 2 நிமிடங்கள் கழித்து பன்னீர் சேர்க்கவும். நன்றாக கிளர வேண்டும். எண்ணெய் பிரிந்து வர வேண்டும். கடைசியாக இதில் துருவிய பன்னீர் சேர்த்துக் கொள்ளவும். செம்ம சுவையாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“