இன்ஸ்கிராமில் தனது வித்தியாசமான மற்றும் ஆக்கபூர்வமான முயற்சிகளால், அனைவரின் கவனத்தை ஈர்த்தவர் பனிமலர் பன்னீர்செல்வம்.
இவர் தற்போது 100 நாட்கள் சுய ஒழுக்கம் அல்லது சுய முன்னேற்றத்திற்கான சவாலை நடத்தி வருகிறார். இது குறிப்பாக அனைவரின் கனவத்தை ஈர்த்துள்ளது. காலையில் 6.30 மணிக்கு எழுந்து கொள்வது, சமையல் வேலை, வீட்டை சுத்தமாக வைத்துகொள்வது, அவரின் தனசரி விளம்பர படபிடிப்பு, வீடியோ கண்டெண்ட் உருவாக்கும் உள்ளிட்ட பணிகளுக்கு எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்பதை அவர் பகிருந்து கொள்கிறார். ஒரு பெண்ணின் பணிச்சுமை எப்படி இருக்கிறது? . அதற்கு குறைந்த பட்சம் வீட்டில் இருக்கும் ஆண்கள் உதவ வேண்டும் என்று முக்கிய கருத்தை அவர் பகிருந்துகொள்கிறார். இந்நிலையில் இந்த சாவாலை நீங்களும் முன்னெடுத்து செய்யலாம்.
வீட்டை சுத்தம் செய்வது, சமையல் செய்வதில் பெண்கள் அதிகம் நேரம் செலுத்தினால் அவர்களின் வேலை எவ்வளவு பாதிக்கும் என்பதையும் அவர் கூறுகிறார். மேலும் இதற்கு முன்பாக அவர் 100 நாட்கள் உடல் எடை குறைய முயற்சிகள் செய்யும் ஒரு சவாலையும் செய்தார். இதுவும் அனைவரிடத்திலும் கவனம் பெற்றது. இந்நிலையில் இதில் அவர் எடுத்துக்கொண்ட உணவு, செய்த உடல் பயிற்சி என்று முக்கிய தகவலை அவர் பகிர்ந்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“