ஆண்டு முழுவதும் கிடைக்கும் பப்பாளி, ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளின் வளமான மூலமாகும். இதில் பாப்பைன் எனும் சூப்பர் என்சைம் உள்ளது, இது விரைவான செரிமானத்திற்கு உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
பளபளப்பான சருமம் மற்றும் அடர்த்தியான கூந்தலை விரும்பும் பெண்களுக்கு இது மிகவும் பிடித்தமானது.
உங்கள் தோல் மற்றும் முடி பராமரிப்பு வழக்கத்தில் பப்பாளி பழத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது இங்கே.
சரும பராமரிப்பு
சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது:
வைட்டமின் ஏ மற்றும் பப்பேன் என்சைம் கொண்ட பப்பாளி’ சருமத்தின் இறந்த செல்கள் மற்றும் செயலற்ற புரதங்களை அகற்ற உதவுகிறது, இதனால் சருமம் புத்துயிர் பெறும். இது உங்கள் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. நீங்கள் பளபளப்பான சருமத்தை விரும்பினால், பப்பாளி-தேன் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தவும்.
அரை பப்பாளியை மசித்து, அதனுடன் மூன்று ஸ்பூன் தேன் கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். அதை உங்கள் முகம் மற்றும் கழுத்தில் மெதுவாக தடவவும். 20 நிமிடம் அப்படியே விட்டு, பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.
தழும்புகளை குறைக்கிறது:
முகப்பருவால் அவதிப்படுகிறீர்களா? பச்சை பப்பாளியை நன்றாக அரைத்த விழுதை’ உங்கள் முகத்தில் தடவி அரை மணி நேரம் விடவும். இது சருமத்தில் உள்ள தேவையற்ற வடுக்களை போக்க உதவும்.
முகத்தைத் தவிர, மசித்த பப்பாளியை புண் மற்றும் குதிகால்களுக்கு சிகிச்சையளிக்கவும் பயன்படுத்தலாம்.
முடி பராமரிப்பு
முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது:
ஆய்வுகளின்படி, பப்பாளியில் உள்ள சத்துக்கள்’ வழுக்கை வராமல் தடுக்கிறது. வாரத்திற்கு மூன்று முறையாவது பழத்தை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை குறைக்கலாம்.
பப்பாளி ஹேர் மாஸ்க் வறண்ட உச்சந்தலைக்கு சிகிச்சையளிக்க உதவும். பச்சை பப்பாளியின் விதைகளை நீக்கி, பழத்தை அரை கப் தயிருடன் கலக்கவும். பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் சுமார் 30 நிமிடங்கள் விட்டுவிட்டு, பின்னர் கழுவவும்.
இயற்கை கண்டிஷனர்:
தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளதால், பப்பாளி ஒரு இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது, இது உங்கள் தலைமுடியை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுகிறது.
பப்பாளி, வாழைப்பழம், தயிர் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கெட்டியான பேஸ்டாக கலக்கவும். ஈரமான கூந்தலில் இதைப் பயன்படுத்துங்கள். உங்கள் உச்சந்தலையில் வெப்பத்தை உருவாக்க ஒரு டவலை போர்த்தி அல்லது ஷவர் கேப்பை பயன்படுத்தி அரை மணி நேரம் அப்படியே விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“