சுவையான பப்பாளி கூட்டு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பழுக்காத பப்பாளி – 1
கடலைப்பருப்பு – 3/4 கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய் – 3/4 கப்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
வரமிளகாய் – 3
தாளிக்க
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் கடலைப் பருப்பை நீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் அடுப்பில் கடாய் வைத்து
அதில் தண்ணீர் ஊற்றி, கடலைப் பருப்பு சேர்த்து 15-20 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
கடலைப் பருப்பு ஓரளவு வெந்ததும், அதில் பப்பாளியை சேர்த்து மூடி வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும். அடுத்து அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். பின் மிக்ஸியில் அரைப்பதற்கு
கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து பேஸ்ட் செய்து, பப்பாளியுடன் சேர்த்து நன்கு பிரட்டி, 5-8 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
அதற்குள் மற்றொரு அடுப்பில் சிறிய கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பப்பாளி கலவையுடன் சேர்த்து கலந்து இறக்கினால், சுவையான பப்பாளி கூட்டு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“