அழகான சருமம், கச்சிதமான உடல் அமைப்பு வேண்டுமா? பப்பாளி பழத்தை இப்படி சாப்பிடுங்க!

பப்பாளி பழத்தில் பாப்பைன் என்ற சூப்பர் என்சைம் உள்ளது, இது விரைவான செரிமானத்திற்கு உதவுகிறது.

பப்பாளி பழத்தில் பாப்பைன் என்ற சூப்பர் என்சைம் உள்ளது, இது விரைவான செரிமானத்திற்கு உதவுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Papaya beauty tips

Papaya for glowing skin and fit body

பளபளப்பான சருமம் மற்றும் கச்சிதமான உடல் அமைப்பை அடைய, பப்பாளிப் பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது நம்பமுடியாததாகத் தோன்றலாம், ஆனால் இந்த ஒரு பழம், உண்மையில் உங்கள் அழகு மற்றும் ஆரோக்கியத் தேவைகளுக்கு அதிசயங்களைச் செய்யும் என்று ஊட்டச்சத்து நிபுணர் மெஹர் ராஜ்புத் கூறுகிறார்.

கொழுப்பைகுறைத்து, நீங்கள்விரும்பும்அழகானஉடலமைப்புபெற:

Advertisment

பழத்தில் பாப்பைன் எனும் சூப்பர் என்சைம் உள்ளது, இது விரைவான செரிமானத்திற்கு உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான நீர் வேலைகளை உருவாக்குகிறது, இவை அனைத்தும் திறமையான எடை இழப்பு உத்திக்கு உதவுகின்றன. ஒரு மாதத்திற்கு, ஒவ்வொரு நாளும் இரண்டு கிண்ணங்கள் பப்பாளி சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இறுதியில் நீங்களே மாற்றத்தை காண்பீர்கள்.

செரிமானத்திற்கு உதவுகிறது:

ஒழுங்கற்ற மற்றும் ஆரோக்கியமற்ற உணவு வயிற்றில்  அமிலத்தன்மை அல்லது வயிற்று வலிக்கு வழிவகுக்கும். தினமும் ஒரு கிண்ணம் பப்பாளி, அதன் பப்பெய்ன் என்சைம் மூலம் வயிற்று பிரச்சனைகளைத் தடுக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பப்பாளியில் உள்ள நார்ச்சத்து வயிற்றை சுத்தப்படுத்துகிறது.

தோல் பராமரிப்பு நிபுணரான மோஹித் நரங்’ பப்பாளி, தோலில் செய்யும் நன்மைகளைப் பகிர்ந்து கொள்கிறார்.

Advertisment
Advertisements

எக்ஸ்ஃபாலியேஷன் (Exfoliation): பப்பாளி, ஒரு நொதி விளைவைக் கொண்டிருப்பதால், இறந்த சருமத்தை அகற்றவும், உங்கள் சருமத்தை மேம்படுத்தவும் இது மிகவும் நல்லது.

டி-டேனிங் (De-tanning): பப்பாளி உங்கள் சருமத்திற்கு எவ்வளவு புத்துணர்ச்சி தருகிறதோ, அதே அளவு உடலுக்கும் புத்துணர்ச்சி தருகிறது. இது ஒரு நல்ல அண்டி-டேனிங் விளைவைக் கொண்டுள்ளது மற்றும் டி- டேனிங் செய்வதற்கு ஒரு சிறந்த அழகு தேர்வாகும்.

ஸ்கின் பாலிஷிங்: பப்பாளி உங்கள் சருமத்திற்கு ஒரு பளபளப்பு மற்றும் ஸ்மூத் ஃபினிஷிங் கொடுக்க உதவுகிறது, இது உங்கள் முகத்திற்கு நிறைய பிரகாசத்தை தருகிறது.

என்ன! இனி தினசரி உங்கள் உணவுப் பழக்கத்தில் பப்பாளி பழத்தை சேர்த்துக் கொள்வீர்களா?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: