செம்ம சுவையான பப்பாளி அல்வா ஒரு முறை, இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள்
பப்பாளி 1
முக்கால் கப் சர்க்கரை
4 ஸ்பூன் நெய்
2 ஸ்பூன் முந்திரி
2 ஸ்பூன் பாதாம் நறுக்கியது
ஏலக்காய் தூள் கால் ஸ்பூன்
செய்முறை : பாதி பழுத்த பப்பாளி பழத்தின் தோலை நீக்கி, அதை துருவிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து பாதாம், முந்திரியை வறுக்க வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தொடர்ந்து கொஞ்சம் நெய் சேர்த்து, துருவிய பப்பாளியை சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்த்து கிளரவும். தொடர்ந்து நெய் சேர்த்து கிளரவும். ஏலக்காய் தூள் சேர்க்கவும். தொடர்ந்து வறுத்த முந்திரி, பாதாமை சேர்த்து கிளரவும்.