Sun TV Nayagi Serial Papri ghosh, pandavar illam, tamil serial news
Papri Ghosh : சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாயகி சீரியலில், ஆனந்திக்கு தோழியாகவும் பாண்டவர் இல்லம் சீரியலில் நாயகி கயலாகவும் நடித்து வருபவர் நடிகை பப்ரி கோஷ். கொல்கத்தாவில் 1990-ல் பிறந்த இவர். 2009-ஆம் ஆண்டு வெளியான பெங்காலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நடிப்புத் துறைக்கு வர வேண்டுமென்பது பப்ரியின் அப்பாவின் ஆசையாம்.
பெங்காலி அதன்பிறகு தெலுங்கு அதைத்தொடர்ந்து தமிழில் அறிமுகமானார். 2015-ல் வெளியான ’டூரிங் டாக்கீஸ்’ திரைப்படம் தான் பப்ரியின் முதல் தமிழ் படம். இதனை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து, ’பைரவா’, ’சக்கப் போடு போடு ராஜா’, ’சர்கார்’, ’விஸ்வாசம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக சர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷின் அக்காவாகவும், விஸ்வாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாகவும் நடித்திருப்பார்.
சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது, பப்ரிக்கு `நாயகி' ஆஃபர் வந்ததாம். முதலில், நெகட்டிவ் கேரக்டருக்கு ஆடிஷனுக்கு வர சொல்லி, ஆடிஷனும் முடிந்ததாம். கண்மணி கேரக்டருக்கு ஏற்கெனவே செலக்ட் ஆகியிருந்தவர் திடீரென ரிஜெக்ட் ஆக, அந்த வாய்ப்பை பப்ரிக்கு கொடுத்து, கதாபாத்திரத்தில் சில மாற்றங்களையும் செய்திருக்கிறார்கள்.
Advertisment
Advertisements
விஜய்யுடன் நடித்த அனுபவத்தைப் பற்றி, “விஜய் சார் எங்கிட்ட ஒரு கேள்வி கேட்டா, நான் பத்து வரிகளில் பதில் சொல்வேன். அவர் சிரிச்சுகிட்டே, `நீ பேசுறது ரொம்ப க்யூட்டா இருக்கு. இப்போ நீ பேசுற தமிழில் மிஸ்டேக் குறைஞ்சுடுச்சு'னு சொல்வார். என் அப்கம்மிங் புராஜெக்ட்டுகள் பற்றியும் அக்கறையோடு கேட்பார்” என முன்பு ஒரு நேர்க்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
பப்ரிக்கு ஆடுவது, பாடுவது, மாடலிங் செய்வது தான் பொழுது போக்காம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பெயிண்டிங் பண்ணுவாராம். உணவு என்றால் அசைவம் தான். அதுவும் பெங்காலி உணவு என்றால் ஒரு கை பார்த்து விடுவாராம்.