பரங்கிக்காயின் இலை முதல் காய் வரை அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பூசணி வகையை சேர்ந்த பரங்கிக்காயில் வைட்டமின் A ஏராளமாக உள்ளது. கண் பார்வை, கண்களுக்கு நல்லது. அதே போல் வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை தரும். உடல் எடையையும் குறைக்க உதவும். இதில் சூப் செய்வது குறித்து பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் – 1 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்)
பூண்டு – 4 பல்
வெள்ளரி விதைகள் – 1 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
கடாயில்
கடாயில் வெண்ணெய் விட்டு உருக்கி வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் தோல் நீக்கி நறுக்கிய பரங்கிகாய்
துண்டுகள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வேக விடவும். வேக வைத்த பின் இறக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். இப்போது அதை மீண்டும் அடுப்பில் வைத்து மிதமாக சூடு செய்து மிளகுத் தூள் தூவி இறக்கவும். மேலே வெள்ளரி விதைகள் தூவிப் பரிமாறலாம். சத்தான பரங்கிக்காய் சூப் ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“