ஒருமுறை பரங்கிக்காய் பால் கூட்டு செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
பரங்கிக்காய் அரை கிலோ
காஸ் ஸ்பூன் மஞ்சள் பொடி
உப்பு தேவையான அளவு
தண்ணீர்
தேங்காய் 3 ஸ்பூன்
பச்சை மிளகாய் 4
அரிசி மாவு 1 ஸ்பூன்
வெல்லம் கொஞ்சம்
பால் கால் கப் காய்ச்சியது
எண்ணெய் 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
வத்தல் 3
செய்முறை : ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்கவும். அதில் பரங்கிக்காய் சேர்த்து கிளரவும். தொடர்ந்து அதில் தண்ணீர், மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து வேக வைக்கவும். தொடர்ந்து மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், அரிசி மாவு சேர்த்து அரைத்துகொள்ளவும். பரங்கிக்காய் வெந்ததும் அதில் சேர்த்து கிளரவும். வெல்லம் சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து பால் சேர்க்கவும். தொடர்ந்து கிளர வேண்டும். இதில் எண்ணெய் கடுகு, வத்தல் சேர்த்து தாளித்து கொட்டவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“