தேர்வில் ஃபெயில் ஆனால் கோபப்படுவாங்க.. இது என்ன புதுசா கொண்டாடுறாங்க?!?!

நாடு முழுவதும் நடைபெற்ற 10ம் வகுப்பின் பொது தேர்வில் மாநிலம் வாரியாக தேவு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. இதில் தோல்வியடைந்த மாணவனைப் பெற்றோர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடினர்.

மத்திய பிரதேசத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. நடந்து முடிந்த அந்தத் தேர்வில் 10ம் வகுப்பில் 34% மற்றும் 12ம் வகுப்பில் 32% மாணவர்களும் தோல்வியடைந்தனர். இதனால் அம்மாநிலம் முழுவதும் பல மாணவர்கள் தற்கொலை முடிவைக் கையில் எடுத்தனர். தற்கொலை முயற்சியில் 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தும் போனார்கள்.

இவ்வாறு மத்திய பிரதேசத்தில் 10ம் வகுப்பு மாணவர் ஒருவர் 4 பாடங்களில் ஃபெயில் ஆனார். இருப்பினும் தங்கள் மகன் எவ்வித தவறான முடிவையும் எடுத்துவிடக் கூடாது என்று அஞ்சினார்கள். எனவே அந்த பெற்றோர்கள் தங்களின் மகனைத் தோலில் தூக்கி வைத்துக்கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். மேலும் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

இந்த கொண்டாட்டத்தைப் பார்த்த மக்கள் அதிர்ச்சியில் கேள்விகள் எழுப்பினார்கள். அதற்கு அந்த மகனின் தந்தை, “தேர்வில் தோற்றால் என்ன? என் மகன் வாழ்வில் வெற்றிபெற வேறு வழிகள் உள்ளது. இது அவன் வாழ்வின் முடிவு கிடையாது. இந்தத் தேர்வு இல்லையென்றால் மறு தேர்வில் பாஸ் ஆகிவிடுவான். அப்படி இல்லையென்றால் கூட என் மகனை வேறு துறையில் வெற்றிபெற செய்வேன்.” என்று கூறினார்.

மகனின் தோல்வியிலும் வெற்றியைத் தேடும் இந்தப் பெற்றோரின் செயல் பாராட்டிற்குடையதே.

×Close
×Close