மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் ரெசிபியில் இதுவும் ஒன்று. பருப்பு பிரதமன் செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
1 கப் பாசி பருப்பு
3 கப் தண்ணீர்
2 கப் வெல்லம்
3 கப் தேங்காய் பால்
கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்
3 ஸ்பூன் நெய்
1 வாழைப்பழம் நறுக்கியது
8 முந்திரி
செய்முறை : முதலில் நாம் பாசி பருப்பை வறுக்க வேண்டும். தொடர்ந்து அதில் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைக்கவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர், வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும். தொடர்ந்து வெல்ல பாகை குக்கரில் சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தொடர்ந்து தேங்காய் பால் சேர்த்து குறைந்த தீயில் கிளரவும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து பழம் நறுக்கியதை சேர்த்து நன்றாக பொறிக்க வேண்டும். அதை பாயாசத்தில் சேர்க்கவும். தொடர்ந்து நெய்யில் முந்திரியை வறுக்க வேண்டும். தொடர்ந்து அதை நெய்யில் சேர்க்கவும்.