parle g biscuit : இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் பார்லே புராடக்டஸ் பிரைவேட் லிமிடெட்டின் பார்லேஜி பிஸ்கட் செய்திருக்கும் சாதனை அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
Advertisment
பார்லே நிறுவனத்தின் பார்லே-ஜி பிஸ்கட் தயாரிப்பு 1938 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் பிஸ்கட்டான பார்லேஜி பற்றி எந்த ஒரு அறிமுகமே தேவையில்லை. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்த பிஸ்கெட்டை ருசி பார்க்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு பார்லேஜி பிஸ்கட் 90களில் மிகவும் பிரபலம்.
இந்த பிஸ்கட் பாக்கெட் வாங்கினால் சக்தி மான் ஸ்டிக்கர்கள் கிடைக்கும். அதற்காகவே தேடி தேடி பிஸ்கெட் பாக்கெட்டை வாங்கிய காலங்களும் உண்டு. இதன் பின்பு எத்தனையோ பிஸ்கெட் பாக்கெட்டுகள் இந்தியாவில் அறிமுகம் ஆனாலும் பார்லேஜி இடத்தை யாரலும் பிடிக்க முடியவில்லை என்றே கூறலாம். மலிவான விலையில் தொடங்கி டெஸ்ட் வரை பார்லேஜி என்றாலே அனைவருக்கும் ஆல் டைம் ஃபேவரெட் தான்.
இப்போது இந்த பிஸ்கெட் பாக்கெட் ரூ. 5 க்கு விற்கப்படுகிறது. ஏன் இந்த திடீர் பார்லேஜி ரீவைண்ட் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கு, கடந்த 82 ஆண்டுகளில் செய்யாத சாதனையை பார்லேஜி பிஸ்கெட் இப்போது இந்த லாக் டவுனில் செய்திருக்கிறது.
Advertisment
Advertisements
சில ஆண்டுகளாக பார்லேஜி பிஸ்கட்டின் விற்பனை சந்தையில் மந்தமாக இருந்தது. இதனால், சமீபத்தில் பார்லே நிறுவனத்தில் வேலை செய்த ஊழியர்கள் பலரும் வேலை இழக்கும் அபாயமும் ஏற்பட்டது. ஆனால் இந்த லாக்டவுனில் பார்லேஜி பிஸ்கட் நிகழ்த்தி இருக்கும் சாதனை உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான்.
இந்த லாக்டவுனின் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பங்கள், புலம் பெயர் தொழிலாலர்கள் பலரும் பார்லேஜி பிஸ்கட்டை தான் அதிகம் வாங்கி உண்டு இருக்கிறார்கள், அவர்களின் ஒருவேளை பசியை பார்லேஜி போக்கிருகிறது. விலையும் கம்மி, குழந்தைகளுக்கும் பிடித்தமான சுவை என்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு திரும்பும் போது பார்லேஜி பிஸ்கட்டை தனது குழந்தைகளுக்கு வாங்கி தந்துள்ளனர்.
மார்ச் மாதத்தில் தொடங்கி ஜூன் மாதம் வரை பார்லேஜி பிஸ்கெட் விற்பனை 80 % - 90% அதிகரித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்புகளின் பிரிவுத் தலைவர் மயங்க் ஷா கூறியுள்ளார்.