பரோட்டா சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஆனால் செய்வது எப்படி என்று நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கும். ஏனென்றால் அதற்கு மாவு பிசைந்து தேய்த்து போட வேண்டும் இது மிகப்பெரிய ப்ராசஸ் என்றே நிறைய பேர் செய்யாமல் இருப்பார்கள்.
Advertisment
ஆனால் அவர்கள் எல்லாம் வீட்டில் இருக்கும் முறுக்கு உரல் வைத்து எப்படி ஈசியாக பரோட்டா செய்வது என்று புதுமை சமையல் அண்ட் கிராப்ட்ஸ் யூடியூப் பக்கத்தில் செய்து காட்டிருப்பது பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் முறுக்கு உரல் மைதா மாவு உப்பு சர்க்கரை சுடுதண்ணீர்
Advertisment
Advertisements
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு அதனுடன் உப்பு, சர்க்கரை ஆகியவற்றை கலந்து விடவும். பின்னர் கை பொறுக்கும் சூட்டில் சுடு நீர் வைத்து அதனை சிறிது சிறிதாக ஊற்றி மாவு பிசைந்து கொள்ளவும்.
பின்னர் ஒரு தட்டில் சிறிது எண்ணெய் சேர்த்து கொள்ளவும் முறுக்கு உரலில் அதேபோல் எண்ணெய் சேர்த்து அதில் பிசைந்து வைத்துள்ள மாவை போட்டு முறுக்கு போல் பிழியவும்.
பின்னர் அதனை எடுத்து எப்போதும் போல சப்பாத்தி மாவிற்கு தேய்த்து திரட்டி கைகளால் தட்டி தோசை கல்லில் சுட்டு எடுக்கலாம். பரோட்டா நூல் மாதிரி சாஃப்டாக வரும்.