Parotta recipe in tamil, Parotta tamil : தமிழ்நாட்டில் பிரியாணிக்கும், பரோட்டாவிற்கும் போட்டி வைத்தால் அடித்து சொல்லலாம் பரோட்டா தான் ஜெயிக்கும் என்று. அவ்வளவு பரோட்டா பிரியர்கள் இருக்கிறார்கள் நம்ம ஊர்ல. பரோட்டோவில் பல வகையுண்டு. கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா,சிலோன் புரோட்டா, மலபார் புரோட்டா, காயின் புரோட்டா, வீச்சு புரோட்டா, லாபா புரோட்டா ன்னு ஒரு லிஸ்டே இருக்கு..'
வீட்டிலேயே பரோட்டா செய்யலாம் வாங்க.
1. மைதா – 2 கப்
2.கடலை எண்ணெய் -200 கிராம்
3. சர்க்கரை – 1 ஸ்பூன்
4. உப்பு
parotta recipe செய்முறை:
1. முதலில் மைதாவில் உப்பு, சர்க்கரை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரும், 50 கிராம் எண்ணெயும் விட்டு, நன்கு கெட்டியாக பிசைய வேண்டும்.
2. பின்பு ஈரத்துணியைக் கொண்டு ஒரு மணி நேரம் மாவை ஊற விட வேண்டும்.
3. அதன் பின்பு மாவை எலுமிச்சை அளவிற்கு உருட்டிக் கொள்ள வேண்டும்.
4.கல்லின் நடுவில் கடலெண்ணெய்யை ஊற்றி நன்கு காயவைக்க வேண்டும். பின்பு கல்லை சுற்றி தட்டி வைத்துள்ள பரோட்டோவை வைக்க வேண்டும்.
5. அதைத் தொடர்ந்து, எண்ணெய் கொதித்ததும் அதில் புரோட்டாக்களைப் போட்டு பொன்னிறத்தில் பொரித்தெடுக்க வேண்டும். இப்போது எடுத்து சாப்பிட்டால் அப்படியே உள்ளே போகும்.
நல்ல பொன்னிறத்தில் மினுமினுப்பாகவும் மொறுமொறுப்பாகவும் எண்ணெய் பரோட்டாவை பார்த்ததுமே நம்ம ஆளுங்க சாப்பிட தயாராகிடுவாங்க.
';தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்pபில் பெற t.me/ietamil