Advertisment

கொஞ்சம் நெய், இந்த பருப்பு பொடி : அட என்ன ஒரு ருசியான ரெசிபி

இப்படி ஒரு முறை பருப்பு பொடி செய்து பாருங்க. செம்ம சுவையாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
saawe
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இப்படி ஒரு முறை பருப்பு பொடி செய்து பாருங்க. செம்ம சுவையாக இருக்கும்.

Advertisment

 

தேவையான பொருட்கள்

 

அரை கப் துவரம் பருப்பு

 

அரை கப் கடலை பருப்பு

 

அரை கப் பாசிப் பருப்பு

 

கால் கப் உளுந்தம் பருப்பு

 

அரை கப் பொட்டுக்கடலை

 

சீரகம்

 

கறிவேப்பிலை

 

கல் உப்பு

 

பெருங்காயத்தூள்

 

வர மிளகாய்

 செய்முறை: அரை கப் துவரம் பருப்பை  முதலில் நன்றாக வறுக்க வேண்டும். தீயை மிதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்டதும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அரை கப் கடலை பருப்பு வறுக்க வேண்டும். பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். இதையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அரை கப் பாசிப் பருப்பை வறுக்க வேண்டும்.  உளுந்தம் பருப்பு கால் கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதையும் நன்றாக வறுக்க வேண்டும். தொடந்து இதை எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து அரை கப் பொட்டுக்கடலையை நன்றாக வறுக்க வேண்டும். அரை ஸ்பூன் சீரகம் நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து 15 வத்தல் மிளகாய்களை வறுக்க வேண்டும். தொடர்ந்து கறிவேப்பிலையை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து கால் ஸ்பூன் நெய்யை சேர்க்கவும், அதில் 15 பல் நசுக்கிய பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து கல் உப்பை சேர்த்து வதக்க வேண்டும் . தொடர்ந்து அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இந்நிலையில் வறுத்த அனைத்தையும் சூடு ஆறியதும், பொடி  செய்ய வேண்டும். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment