ஒரு முறை பருப்பு பொடி, இப்படி செய்து பாருங்க செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
அரை கப் துவரம் பருப்பு
அரை கப் கடலை பருப்பு
அரை கப் பாசிப் பருப்பு
கால் கப் உளுந்தம் பருப்பு
அரை கப் பொட்டுக்கடலை
சீரகம்
கறிவேப்பிலை
கல் உப்பு
பெருங்காயத்தூள்
வர மிளகாய்
செய்முறை: அரை கப் துவரம் பருப்பை முதலில் நன்றாக வறுக்க வேண்டும். தீயை மிதமான சூட்டில் வைத்து வறுக்க வேண்டும். நன்றாக வறுபட்டதும் தனியாக எடுத்துக்கொள்ளுங்கள். அரை கப் கடலை பருப்பு வறுக்க வேண்டும். பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும். இதையும் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அரை கப் பாசிப் பருப்பை வறுக்க வேண்டும். உளுந்தம் பருப்பு கால் கப் எடுத்துக்கொள்ளுங்கள். அதையும் நன்றாக வறுக்க வேண்டும். தொடந்து இதை எடுத்துக்கொள்ளவும். தொடர்ந்து அரை கப் பொட்டுக்கடலையை நன்றாக வறுக்க வேண்டும். அரை ஸ்பூன் சீரகம் நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து 15 வத்தல் மிளகாய்களை வறுக்க வேண்டும். தொடர்ந்து கறிவேப்பிலையை நன்றாக வறுக்க வேண்டும். தொடர்ந்து கால் ஸ்பூன் நெய்யை சேர்க்கவும், அதில் 15 பல் நசுக்கிய பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து கல் உப்பை சேர்த்து வதக்க வேண்டும் . தொடர்ந்து அரை ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். இந்நிலையில் வறுத்த அனைத்தையும் சூடு ஆறியதும், பொடி செய்ய வேண்டும்.