பார்த்திபனிடம் இருந்து பிரிந்ததற்கு காரணம் இதுதான்; நடிகை சீதா ஓபன் டாக்

நம்ம எல்லாருக்கும் வாழ்க்கையில சில எதிர்பார்ப்புகள் இருக்கும்ல? எனக்கும் இருந்தது. நான் ரொம்ப சராசரியான, உலகமே தெரியாத ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துல இருந்து வந்த பொண்ணு.

நம்ம எல்லாருக்கும் வாழ்க்கையில சில எதிர்பார்ப்புகள் இருக்கும்ல? எனக்கும் இருந்தது. நான் ரொம்ப சராசரியான, உலகமே தெரியாத ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துல இருந்து வந்த பொண்ணு.

author-image
WebDesk
New Update
Seetha Parthiban

Seetha Parthiban

கோலிவுட்டின் காதல் கதைகளில் சில, திரைப்படங்களைவிடவும் சுவாரஸ்யமானவை. அப்படியான ஒரு கதைதான் நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகை சீதாவின் வாழ்க்கை. ஒரு காலத்தில் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் காதல், திருமணம், குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, மற்றும் அவர்களின் குழந்தைகள் எனப் பல திருப்பங்களைக் கொண்டது. 

Advertisment

பார்த்திபன், அப்போது ஒரு இளம் இயக்குநர். அவர் இயக்கிய 'புதிய பாதை' திரைப்படம் பெரும் வெற்றிபெற, அதில் கதாநாயகியாக நடித்தவர் சீதா. படம் ஹிட்டானதோடு, இருவருக்கும் இடையே காதல் தீப்பொறி பற்றிக்கொண்டது. திரைப்படத்தில் மட்டுமல்ல, நிஜ வாழ்க்கையிலும் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

1990-ஆம் ஆண்டு, பார்த்திபன் - சீதா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக இவர்கள் வலம் வந்தனர். இந்த தம்பதிக்கு அபிநயா, கீர்த்தனா, ராக்கீ என மூன்று பிள்ளைகள் உள்ளனர். ஆனால், காலம் ஒரு திரைப்படத்தைப்போல் அடுத்தடுத்த திருப்பங்களைக் கொண்டுவந்தது. சில காரணங்களால், பார்த்திபன் - சீதா தம்பதி இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்தன. ஒருகட்டத்தில், பிரிந்து வாழும் முடிவை இருவரும் எடுத்தனர். பல வருடங்கள் பிரிந்திருந்த பிறகு, 2001-ஆம் ஆண்டு இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இவர்களின் காதல் கதை சோகத்தில் முடிவடைந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் மரியாதையுடன் நடத்தினார்கள்.

Advertisment
Advertisements

இத்தனை வருடங்கள் கழித்து, நடிகை சீதா ஒரு பேட்டியில் தனது பிரிவுக்குக் காரணம் என்ன என்பதை மனம் திறந்து பேசியுள்ளார்.


 "நம்ம எல்லாருக்கும் வாழ்க்கையில சில எதிர்பார்ப்புகள் இருக்கும்ல? எனக்கும் இருந்தது. நான் ரொம்ப சராசரியான, உலகமே தெரியாத ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்துல இருந்து வந்த பொண்ணு. பார்த்திபன் சாரும் கிட்டத்தட்ட அதே மாதிரிதான். அதனால, பணம், சொத்து, அந்தஸ்துன்னு எதையும் நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை.

நான் எதிர்பார்த்தது ரொம்ப சாதாரணமான ஒரு விஷயம். ஒரு சராசரி பொண்ணு என்ன நினைக்குமோ, அதேதான். சுஹாசினி ஒரு படத்துல 'என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான்'னு பாடுவாங்க பாத்தீங்களா? அந்த மாதிரி ஒரு அப்பாவித்தனமான காதல், அன்பு. ஒரு கணவன் கிட்ட இருந்து முழு அன்பும், ஆதரவும் கிடைக்கணும்னுதான் நான் ஆசைப்பட்டேன். ஒரு வாழ்க்கையில இந்த எதிர்பார்ப்பு கூட இல்லைன்னா, பிறகு என்ன இருக்கு?" என்று சீதா மன வருத்தத்துடன் அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார். 

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: