மனைவி அந்தஸ்து சீதா-வுக்கு மட்டும் தான்; அவங்க அம்மா இறந்தப்ப நான் இதெல்லாம் செஞ்சேன் – நடிகர் பார்த்திபன்

இன்று எங்க இருவருக்கும் மனசு வருத்தம் தவிர அதுக்கு பின்னாடி இருந்த மரியாதை எல்லாம் அப்படியே தான் இருக்கு அந்த அன்பு அப்படியே தான் இருக்கு. அதில் எந்த மாற்றமும் இல்ல.

இன்று எங்க இருவருக்கும் மனசு வருத்தம் தவிர அதுக்கு பின்னாடி இருந்த மரியாதை எல்லாம் அப்படியே தான் இருக்கு அந்த அன்பு அப்படியே தான் இருக்கு. அதில் எந்த மாற்றமும் இல்ல.

author-image
WebDesk
New Update
Parthiban seetha

Parthiban And Seetha

ஒரு திருமண உறவில் கணவன்-மனைவி இருவருக்குமிடையே இருக்கும் பந்தம், காலம் கடந்தும் மாறாதது. அதைவிட, அந்த உறவில் இருக்கும் மரியாதை, அன்பு, ஒருவருக்கொருவர் கொடுக்கும் முக்கியத்துவம் ஆகியவைதான் அந்த பந்தத்தை வலுவாக்குகிறது. நடிகர் பார்த்திபன் சமீபத்தில் பேசிய சில வார்த்தைகள், இந்த உண்மைகளை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகின்றன.

Advertisment

"மனைவி" என்ற அந்தஸ்தை சீதாவுக்கு மட்டும் தான் கொடுத்தேன். வேறு யாருக்கும் இதுவரை நான் கொடுக்கவில்லை," என்று அவர் கூறியபோது, அந்த வார்த்தைகளில் இருந்த உண்மை ஆழமானது. இன்று கணவன்-மனைவிக்குள் சண்டை, மனக்கசப்பு ஏற்படுவது சாதாரண விஷயம். ஆனால், அந்த மனக்கசப்புக்கு பின்னாலும் மாறாத அன்பும், மரியாதையும் இருப்பதால்தான் அந்த பந்தம் வலுவாக இருக்கிறது. 

”சமீபத்தில் என் மனைவியோட அம்மா இறந்துட்டாங்க. அவங்க மறைஞ்சதுக்கப்புறம், அபிதான் எனக்கு போன் பண்ணி சொன்னாங்க. காலைல போனேன், ராத்திரி வரைக்கும் எல்லா ஏற்பாடுகளையும் நான்தான் செஞ்சேன். என் மனைவி எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பினாங்க.

Advertisment
Advertisements

"ஏ டு இசட் நீங்கதான் பார்த்தீங்க. ரொம்ப நன்றி"னு அனுப்பி இருந்தாங்க. இந்த இடத்துல நான் என்னவாக இருக்கணுமோ அந்த இடத்துல நான் அதுவாதான் இருக்கேன். என் மகளோட திருமணமா இருக்கட்டும், எதுவா இருந்தாலும், அந்த நிகழ்வுல அவங்களுக்கு முக்கியத்துவம் இருக்கணும்.
.
இன்று எங்க இருவருக்கும் மனசு வருத்தம் தவிர அதுக்கு பின்னாடி இருந்த மரியாதை எல்லாம் அப்படியே தான் இருக்கு அந்த அன்பு அப்படியே தான் இருக்கு. அதில் எந்த மாற்றமும் இல்ல. மனைவிங்கிற அந்தஸ்து சீதாவுக்கு மட்டும்தான். வேற யாருக்கும் நான் அந்த இடத்தை கொடுக்கல”, என்று பார்த்திபன் பேசினார். 

Parthiban seetha 1

இன்றைய தலைமுறையினர், காதல், திருமணம் போன்ற உறவுகளை மிகவும் எளிதாக அணுகுகின்றனர். பார்த்திபன் சொல்வதுபோல், இந்த உறவுகளை ஒரு வியாபாரம் போல நினைக்கும் மனப்பான்மையால், பல நல்ல உறவுகள் சீர்கெட்டுப் போகின்றன. ஆனால், உண்மையான காதல் என்பது அன்பையும், மரியாதையையும் அடிப்படையாகக் கொண்டது. 

பார்த்திபனின்  இந்த வார்த்தைகள், ஒரு கணவனாக, ஒரு அப்பாவாக, ஒரு மனிதனாக பார்த்திபன் கொண்டிருக்கும் பண்பையும், குடும்பத்தின் மீதான அவரது ஆழ்ந்த அன்பையும் காட்டுகிறது. இது வெறும் சினிமா பேட்டி அல்ல, மாறாக ஒரு வாழ்க்கைப் பாடம்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: