இப்படி ஒரு முறை பருப்பு குழம்பை வைத்து சாப்பிடவும். சூப்பரான ரெசிபி இது.
தேவையான பொருட்கள்
சீரகம் – முக்கால் டீஸ்பூன்
பூண்டு – 5 பல்லு
சின்ன வெங்காயம் – 10
பச்சை மிளகாய் – 8
பெரிய நெல்லிக்காய் அளவு புளி
சுடு தண்ணீர்
துவரம் பருப்பு – 150 கிராம்
2 அரை கப் தண்ணீர்
கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி
தக்காளி – 1
தாளிக்க: 1 டீஸ்பூன் எண்ணெய், கடுகு, உளுந்தம் பருப்பு, கட்டி பெருங்காயம், 5 வத்தல் , 20 சின்ன வெங்காயம், கருவேப்பிலை .
செய்முறை: சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் இடித்துகொள்ளவும். இந்நிலையில் புளியில், சூடான நீரை ஊற்றவும். இதை கரைத்து வைத்துகொள்ளவும். ஒரு குக்கரில், பருப்பு, மஞ்சள் பொடி, இடித்த விழுது, தக்காளி, தண்ணீரை சேர்த்து கொள்ளவும். இதை வேக வைக்கவும். வேக வைத்ததும், இதை கிளர வேண்டும். அதில் எண்ணெய் கடுகு, பெருங்காயம், வத்தல், சின்ன வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டவும். தொடர்ந்து 7 நிமிடங்கள் அடுப்பில் வைக்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“