paruppu podi recipes paruppu podi tamil : பருப்பு பொடி சூடான சாதத்துடன், பொரித்த அப்பளத்துடன் ரசித்து சுவைத்து உண்ணத் தக்க வகையிலான பொடி வகை ஆகும்.
Advertisment
காரசாரமான பருப்பு பொடியை ஒருவாட்டி, உங்கள் வீட்டில் இப்படி அரைத்துப் பாருங்கள்!
அன்றாட உண்ணும் உணவு வகைகளில் நிச்சயம் பூண்டின் பங்களிப்பு இருப்பது சிறந்தது. தோசை அல்லது இட்லிக்கு வித்தியாசமான அதே நேரத்தில் ஆரோக்கியமான பொடி வேண்டும் என நினைத்தால், இந்த பொடியைச் செய்து பாருங்கள்.மிகவும் எளிதான இந்த ரெசிபியைத் தயாரிக்க சுமார் 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
Advertisment
Advertisements
தேவையான பொருட்கள்: துவரம் பருப்பு - 50 கிராம் கடலை பருப்பு - 50 கிராம் கொள்ளு - 50 கிராம் வர மிளகாய் - 20 மிளகு - 1 ஸ்பூன்
செய்முறை: முதலில் ஒரு வாணலியில், கொள்ளு போட்டு வறுத்து, அது ஆறியதும், தோல் நீக்கி மிக்ஸில் அரைத்து வைக்கவும். இதேபோல், மிளகாய் தொடர்ந்து, மிளகு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து எடுத்து வைக்கவும். உப்புடன், வறுத்து வைத்த பொருட்களை, ஒவ்வொன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து, அனைத்தையும் சல்லடையில் சலித்து எடுத்தால் பருப்பு பொடி ரெடி..!.