பசலைக்கீரை காளான் குழம்பு செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பட்டன் காளான் - 15
வெங்காயம் - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1/2 கப்
அரைக்க தேவையானவை
பசலைக் கீரை - 1 கட்டு
இஞ்சி - 1 இன்ச்
பச்சை மிளகாய் - 2
பட்டை - 1
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
அன்னாசிப் பூ - 1
கொத்தமல்லி - 1/2
செய்முறை
முதலில் பட்டன் காளானை நீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும், அதற்குள் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். கெட்டியாக பேஸ்ட் போல், தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். இப்போது அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு வதக்கவும். அடுத்து காளான் வேக வைத்து அரைத்து வைத்துள்ள பசலைக் கீரை பேஸ்ட்டை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
அடுத்து இதில் மல்லித் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் வதக்கி, தண்ணீர் தேவையான அளவு சேர்த்து கொதிக்க விடவும். இப்போது இந்த கலவை நன்கு வெந்ததும், அதில் எலுமிச்சை சாறு ஊற்றி கிளறி இறக்கினால் சுவை, ஆரோக்கியமான பசலைக்கீரை காளான் குழம்பு ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“