pasi paruppu payasam recipe tamil: சுவையான பாசிப்பருப்பு பாயாசம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று தேங்காய் பால் மற்றும் பாசிப்பருப்புடன், வெல்லம் மற்றும் நெய்யில் வறுத்த பருப்பு வகைகளுடன் தயாரிக்கப்படுவது.பால் பாயாசத்தை விட இந்த பருப்பு பாயாசம் தான் .வீட்டில் அனைவர்க்கும் பிடிக்கும். அப்புறம் என்ன செஞ்சிடலாமா?
Advertisment
pasi paruppu payasam : பாசி பருப்பு பாயாசம்!
வாணலியில் சிறிதளவு நெய் ஊற்றி பாசிப்பருப்பை பொன்நிறமாக வறுத்த பின் குக்கரில் போட்டு குழைய வேக விடவும்.
வெல்லத்தை தூள் செய்து, ஒரு கப் தண்ணீரில் கரைத்து, வடிகட்டி, வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்க்கவும்.
அதனுடன் பால் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.நெய்யில் முந்திரி, உலர் திராட்சை எல்லாவற்றையும் வறுத்து நெய்யோடு சேர்த்து, கொதிக்கும் பாயசத்தில் கொட்டவும்.
ஏலக்காயை தூளாக்கி அதனோடு சேர்க்கவும். கடைசியில் தேங்காய் பூவை லேசாக நெய்யில் வறுத்து சேர்த்த பின்னர் பாயசத்தை இறக்கவும். சுவையான சத்தான பாசிப்பருப்பு பாயாசம் தயார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil