Paasi Paruppu Payasam: மலையாளிகள் கீர் போல இரண்டு வகையான இனிப்புகளை உருவாக்குகிறார்கள். அவைகள் பயாசம் மற்றும் பிரதமான். பயாசம் கீருடன் நிறைய பொருந்திப் போகும். இதன் அடிப்படை பால் மற்றும் சர்க்கரை. அதேசமயம் பிரதமனின் அடிப்படை தேங்காய் பால் மற்றும் வெல்லம். ஆக இது ஒரு நல்ல இனிப்பு.
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல், இந்த ஸ்னாக்ஸ் செய்து பாருங்க!
பிரதமனுக்கு பாசிப்பருப்பு தான் முக்கியம். இன்னொன்று தேங்காய்ப் பால். இதை கையால் பிழிந்து எடுப்பது தான் சிறந்தது என்று பெரும்பாலான சமையல் குறிப்புகள் சொல்கின்றன. ஆனால் இது சற்றே கடினமானது. ஆனால் ஃபைனல் அவுட் புட்டில் நமக்குக் கிடைக்கும் சுவை, அந்த கடினத்தை மறக்கடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தேவையானப் பொருட்கள்
1 கப் - கழுவி உலர்த்தப்பட்ட பாசிப்பருப்பு
1 டீஸ்பூன் - கழுவி உலர்த்தப்பட்ட கடலைப் பருப்பு
½ கப் - நெய் (இதற்கு தேங்காய் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்)
200 மி.லி - தேங்காய் பால்
1 கப் - அரைத்த வெல்லம்
4-5 - ஏலக்காய்
½ கப் - தேங்காய் உட்பட நறுக்கிய நட்ஸ்
½ கப் - உலர் திராட்சை
செய்முறை
பாதி நெய்யை ஒரு பிரஷர் குக்கரில் சூடாக்கி, அதில் மணம் வரும் வரை, பொன்னிறமாக பருப்பை வறுக்கவும். பின்னர் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில்களுக்கு வேக விடவும். பிரஷர் இறங்கிய பிறகு, பருப்பை நன்கு மசித்துக் கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை சூடாக்கி, அதில் வெல்லம் சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரைந்து, நுரை வரும் வரை கிளறவும். பின்னர் இதை பிரஷர் குக்கரில் பிசைந்து வைத்திருக்கும் பருப்பில் கலந்து, மிதமான தீயில் கிளறவும்.
பாதி தேங்காய்ப் பாலை அரை கப் தண்ணீரில் கலந்து, பிரஷர் குக்கரில் சேர்க்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க விடவும்.
இப்போது ஏலக்காயை லேசாக தட்டி விட்டு போடவும்.
மீதமுள்ள தேங்காய் பாலை கலந்து விட்டு, அடுப்பை அணைக்கவும்.
நெய்யில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட நட்ஸை வறுத்து பிரதமனில் சேர்க்கவும்.
இதை சூடாகவும், ஜில்லெனவும் நம் விருப்பத்திற்கு ஏற்ப சாப்பிடலாம்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”