ஒரு முறை பாசி பருப்பு புட்டு, இப்படி செய்யுங்க. ஈசி ரெசிபி.
தேவையான பொருட்கள்
2 கப் பாசி பருப்பு
தேங்காய் துருவியது 3 ஸ்பூன்
வெல்லம் 1 ஸ்பூன் பொடித்தது
செய்முறை : பாசி பருப்பை நன்றாக கழுவ வேண்டும். இதை 2 மணி நேரம் ஊற வைக்கவும். தொடர்ந்து இதை தண்ணீர் நீக்கி, காயவைத்துவிடுங்கள். இதை அரைத்துகொள்ள வேண்டும். தொடர்ந்து இதை இட்லி தட்டில் வேக வைக்கவும். தொடர்ந்து வேக வைத்ததை மிக்ஸியில் அரைத்துகொள்ளவும். அது உதிராக இருக்கும், அதில் தேங்காய் துருவல், வெல்லம் பொடித்தது சேர்த்து கிளரவும். தொடர்ந்து இதற்கு மேலாக தேங்காய் துருவலை சேர்க்கவும். பாசி பருப்பு புட்டு ரெடி.