Advertisment

செம்ம டேஸ்ட், பாசிப்பருப்பு தோசை: சிம்பிளான செய்முறை

Pasi Paruppu Dosa Tamil Video: சிறுவர்கள் முதல் வீட்டில் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவாக இது அமையும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொத்தமல்லி சட்னி வாசனைக்கே அத்தனை தோசை சாப்பிடலாம்!

Pasi payaru recipes in tamil, Pasi Paruppu Dosa Tamil Video: சத்தானதாகவும், சுவையானதாகவும் உணவுப் பொருட்களை சமைப்பதே சமையல் கலையில் பிரதானம். அதேபோல பொருள் மற்றும் நேர சிக்கனமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அந்த வகையில் சிக்கனமான சத்தான ஒரு உணவுப் பொருளை தயார் செய்யும் முறையை இங்கு காணலாம்.

Advertisment

அது, பாசிப்பருப்பு தோசை! வழக்கமாக உளுந்தம் மாவு, அரிசி மாவு கலந்தே இட்லி மற்றும் தோசை தயார் செய்வார்கள். பாசிப் பருப்பு தோசை எப்படி? என பார்த்துவிடலாமா?

Pasi Paruppu Dosa Tamil Video:: பாசிப்பருப்பு தோசை

பாசிப்பருப்பு தோசை செய்யத் தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 1 கப், பச்சரிசி - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10, பெருங்காயம் - 1 சிட்டிகை.

பாசிப்பருப்பு தோசை செய்முறை:

பாசிப்பருப்பு தோசை செய்யும் முறை வருமாறு: அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.

இதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றவும். அதைச் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி சூப்பராக இருக்கும். பாசிப் பருப்பு சேர்ப்பதால், தோசையின் சுவை தூக்கலாக இருக்கும். சத்து மிகுதியானதும்கூட!

சிறுவர்கள் முதல் வீட்டில் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவாக இது அமையும்.

சூப்பரான பாசிப்பருப்பு தோசை ரெடி.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

Food Recipes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment