சுவையான பாசிப் பருப்பு பர்பி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பாசிப் பருப்பு- 100 கிராம்
கடலை மாவு- 2 ஸ்பூன்
பால்- 1 டம்ளர்
சர்க்கரை- 100 கிராம்
ஏலக்காய் பவுடர்- 1 டீஸ்பூன்
முந்திரி, பாதாம், பிஸ்தா- சிறிதளவு
நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பாசிப் பருப்பை கழுவி அரை மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு பருப்பை அரை மணி நேரம் உலர்த்த வேண்டும். தட்டு, துணியில் போட்டு காய வைக்க வேண்டும்.
இப்போது நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும். அதனை சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் கடாய் வைத்து 2 ஸ்பூன் நெய் விட்டு கடலை மாவு சேர்க்க வேண்டும். அதன்பிறகு பொடித்து வைத்துள்ள பாசிப்பருப்பு பொடியை சேர்த்து வறுக்கவும். பச்சை வாசனை போகும் அளவுக்கு நன்றாக வறுக்க வேண்டும். பின்னர் அதில் ஒரு டம்ளர் பால் சேர்த்து கலக்க வேண்டும்.
அடுத்து சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து கலக்க வேண்டும். கெட்டி ஆகாமல் நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் 2 ஸ்பூன் மீண்டும் நெய் ஊற்றி பாத்திரத்தில் ஒட்டாத அளவுக்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். பின்னர் ஏலக்காய் பொடி, பொடித்த நட்ஸ் கலவையை சேர்க்க வேண்டும். அதன் பிறகு இதனை ஒரு பிளேட்டிற்கு மாற்றி சதுரம் சதுரமாக நறுக்கி எடுக்கலாம். அவ்வளவு தான் சுவையான பாசிப் பருப்பு பர்பி ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“