ரொம்ப சுவையான பாசி பருப்பு தோசை. இப்படி செய்து பாருங்க.
தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 1 கப், பச்சரிசி - கால் கப், தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10, பெருங்காயம் - 1 சிட்டிகை.
பாசிப்பருப்பு தோசை செய்முறை:
பாசிப்பருப்பு தோசை செய்யும் முறை வருமாறு: அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த அரிசி, பருப்புடன் மிளகாய், பெருங்காயம், உப்பை சேர்த்து அரைத்து கொள்ளவும். அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், வெங்காயம் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்.
இதன் பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றவும். அதைச் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். இந்த தோசைக்கு புதினா துவையல், தக்காளி சட்னி சூப்பராக இருக்கும். பாசிப் பருப்பு சேர்ப்பதால், தோசையின் சுவை தூக்கலாக இருக்கும். சத்து மிகுதியானதும்கூட!
சிறுவர்கள் முதல் வீட்டில் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் உணவாக இது அமையும். சூப்பரான பாசிப்பருப்பு தோசை ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“