Patta chitta download in tamil nadu: தூங்கிக் கொண்டிருக்கும்போதும், கால்களை ஆட்டிக்கொண்டிருக்க வேண்டும் என்பார்கள். மனிதர்கள் உஷாராக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கிராமத்து சொல்வழக்கு இது. யாருக்கு இது பொருந்துகிறதோ இல்லையோ, கொஞ்சூண்டு சொந்த நிலம் வைத்திருந்தாலும் உங்களுக்கு இது பொருந்தும்.
காரணம், தவறுதலாகவோ; அல்லது திட்டமிட்டோ அடுத்தவர் நிலங்களையும் பட்டா போடுவது, பத்திரம் போடுவது நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே உங்கள் நிலம் தொடர்பான வருவாய் ஆவணங்களை அவ்வப்போது சரிபார்த்து வைத்துக் கொள்வது உத்தமம்! தேவைக்கு டவுன்லோடு செய்தும் வைத்துக் கொள்ளலாம். பட்டா, புல வரைபடம் ஆகியவற்றை எப்படி டவுன்லோடு செய்வது என இங்கு பார்க்கலாம்.
Patta chitta download: ஆன்லைனில் பட்டா - சிட்டா
மொத்தம் 4 ஸ்டெப்களில் பட்டா, புல வரைபடம் ஆகியவற்றை டவுன்லோடு செய்யலாம். 4 ஸ்டெப்களையும் வரிசையாக இங்கு பார்க்கலாம்.
ஸ்டெப் 1: ஆன்லைனில் பட்டா- சிட்டா பெற முதலில் இதற்காக தமிழக அரசு மின்னணு சேவைக்கான இணையதளத்தை eservices.tn.gov.in என்ற முகவரியில் திறக்க வேண்டும். அதில் ஒரு அட்டவணை கிடைக்கும். உங்கள் மாவட்டத்தின் பெயரையும், உங்கள் நிலம் இருக்கும் பகுதி நகரமா, கிராமமா? என்பதையும் அதில் குறிப்பிட்டு, ‘சப்மிட்’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/01/news-patta-1-300x158.jpg)
ஸ்டெப் 2: அடுத்து கிடைக்கும் அட்டவணையில் உங்கள் நிலம் அமைந்திருக்கும் தாலுகா, வருவாய் கிராமம் ஆகியவற்றை ‘க்ளிக்’ செய்து தேர்வு செய்யுங்கள். பின்னர் பட்டா எண் அல்லது சர்வே எண்ணை பதிவு செய்யுங்கள். அட்டவணையில் கொடுக்கப்பட்டிருக்கும் அங்கீகார எண்ணையும் பதிவு செய்து, ‘சப்மிட்’ கொடுக்கவும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/01/news-patta-2-300x194.jpg)
ஸ்டெப் 3: நீங்கள் சர்வே எண்ணை பதிவு செய்திருந்தால், அதன் உட்பிரிவை அடுத்து கிடைக்கும் அட்டவணையில் தேர்வு செய்ய வேண்டும். பிறகு நீங்கள் பட்டா/ சிட்டா பார்க்க வேண்டுமா? அல்லது புல வரைபடம் பார்க்க வேண்டுமா? என்பதை முடிவு செய்து தேவையானதை க்ளிக் செய்யவும்.
/tamil-ie/media/media_files/uploads/2021/01/news-patta-3-300x191.jpg)
ஸ்டெப் 4: பட்டாவை கிளிக் செய்திருந்தால், இப்போது உங்கள் பட்டா நகல் காண்பிக்கப்படும். புல வரைபடம் கேட்டிருந்தால், அதன் நகல் தெரியும். உங்கள் தேவைக்கு இதை டவுன்லோடு செய்து பயன்படுத்துங்கள்.
மிக எளிமையாக உங்கள் நில ஆவணங்களை இப்படி சரி பார்த்துக் கொள்வதுடன், நகல்களை எடுத்து சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"