Pavakkai recipe in tamil, pavakkai Kuzhambu Making Tamil Video: பாகற்காயின் மகத்துவம் நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பாகற்காய் குழம்பு வைத்தால், குழந்தைகள் சாப்பிட மறுக்கிறார்கள் என்பது பலரது புலம்பல். காரணம், பாகற்காயில் உள்ள கசப்பு சுவை!
Advertisment
பக்குவமாக, கசப்பு தெரியாமல் பாகற்காய் குழம்பு வைக்க முடியும். அதைச் செய்தால் குழந்தைகள் பாகற்காய் குழம்பையும் விரும்பிச் சாப்பிடுவார்கள். அதை எப்படிச் செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்.
pavakkai Kuzhambu Making Tamil Video: பாகற்காய் குழம்பு
பாகற்காய் குழம்பு செய்முறை : வானலியில் எண்ணெய் விட்டு வட்டமாக நறுக்கிய பாகற்காய்களை போட்டு சிவக்க வதக்கி எடுங்கள். பிறகு அதே எண்ணெயில் கடுகு , வெந்தயம், சீரகம், மிளகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளுங்கள். தொடர்ந்து கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்குங்கள்.
தக்காளியில் எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பின் அனைத்து பொடிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக புளிக்கரைசல் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்த்து சுவை பார்த்துக்கொள்ளுங்கள்.
பின்னர் தட்டு போட்டு மூடி 2 நிமிடங்களுக்கு கொதிக்க வையுங்கள். நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் பாகற்காய்களை சேர்த்து கிளறுங்கள். பின் மீண்டும் தட்டுபோட்டு மூடி பதம் வரும் வரை கொதிக்க விடுங்கள்.
குழம்பு பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கொத்தமல்லி தழை தூவுங்கள். பாகற்காய் குழம்பு ரெடி. உங்கள் குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"