/tamil-ie/media/media_files/uploads/2019/11/FotoJet-1.jpg)
Rasathi Serial actress Pavani Reddy
Rasathi Serial Actress Pavani Reddy: விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான ’சின்னத் தம்பி’ சீரியலில் பிரஜினுக்கு ஜோடியாக நடித்தவர் பவானி ரெட்டி. அந்த சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது சன் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும், ராசாத்தி தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/Pavani_Reddy_Photos1.jpg)
ஹைதராபாத்தைச் சேர்ந்த பவானி பிறந்து வளர்ந்தது கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்காம் சிட்டியில். சின்ன வயதில் அம்மாவுடன் சேர்ந்து தினமும் சீரியல் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம் பவானி. தனது 21 வயதில் மாடலிங் துறைக்குள் வந்த பவானி பின்னர் தெலுங்கு சீரியல்களில் நடிக்க தொடங்கினார். சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து கடந்த 2013-ம் ஆண்டு திருமணமும் செய்துக் கொண்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/pavani-reddy-new-stills5-683x1024.jpg)
பின்னர் சின்னதாக இருந்த தவறான புரிதலால், 2017-ம் ஆண்டு தற்கொலை செய்துக் கொண்டார் பிரதீப். காதல் கணவர் இப்படி செய்ததை தாங்கிக் கொள்ள முடியாத பவானி, தன்னை பிஸியாக வைத்துக் கொள்ள எண்ணினார். சில நாட்களில் தான் ‘சின்னத்தம்பி’ சீரியலில் ஹீரோயினாக ஒப்பந்தமானார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/11/pavani-reddy-new-stills11-683x1024.jpg)
அந்த 442 எபிசோடுகளை கடந்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து தனது குடும்ப நண்பர் ஆனந்த் என்பவரை மறுமணம் செய்யவிருப்பதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்தார் பவானி. தமிழில் குடும்பப் பாங்கான கேரக்டர்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கும் பவானி, தெலுங்கிலோ கவர்ச்சிக்கு பெயர் போனவர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.