Eeramana Rojave Pavithra Janani : விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’ஈரமான ரோஜாவே’ சீரியலில் மலர் என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பவித்ரா ஜனனி.
Advertisment
பவித்ரா ஜனனி
சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானார். அதோடு, ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘பகல் நிலவு’, ’மெல்லத் திறந்தது கதவு’, ‘லட்சுமி வந்தாச்சு’ போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது ’ஈரமான ரோஜாவே’ சீரியலில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த பவித்ராவுக்கு, சீரியலில் முழுநீள பெண் கதாபாத்திரம் கிடைத்ததற்கு, அவரின் விடா முயற்சியும், திறமையும் தான் காரணம்.
Advertisment
Advertisements
சிறு வயதிலிருந்தே டான்ஸ் ஆடுவது, நடித்துக் காட்டுவது, காமெடி செய்வது, பாட்டு பாடுவது என சுட்டிப் பெண்ணாக இருந்திருக்கிறார் பவித்ரா. விக்ரம் படங்கள் ஒன்று விடாமல் பார்க்கும் பவித்ரா, அவரை திரையில் பார்த்து நடிப்பில் நிறைய கற்றுக் கொண்டாராம். சிக்கன் பிரியாணி என்றால் ஒரு வெட்டு வெட்டும் பவித்ராவுக்கு வெள்ளையும், நீலமும் பிடித்த நிறங்கள்.
மணப்பெண் அலங்காரத்தில்
மனதுக்கு கஷ்டமாக இருந்தால் லாங் ட்ரைவ் போவதும் பாடல்கள் கேட்பதும் பவித்ராவுக்கு பிடித்தமானவைகளாம்.