’விக்ரமை பார்த்து நிறைய கத்துக்கிட்டேன்’ ஈரமான ரோஜாவே மலர்!

விக்ரம் படங்கள் ஒன்று விடாமல் பார்க்கும் பவித்ரா, அவரை திரையில் பார்த்து நடிப்பில் நிறைய கற்றுக் கொண்டாராம்.

Tamil Serial News, Eeramana Rojave Pavithra Janani
Tamil Serial News, Eeramana Rojave Pavithra Janani

Tamil Serial News: சீரியல்களில் நடிக்கும் நடிகைகளுக்கு சினிமா நடிகைகளுக்கு சமமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இதற்கு முதல் காரணம், இணையத்தில் வித விதமான படங்களை வெளியிட்டு, ரசிகர்களுடனான தொடர்பை நீட்டித்து வருவது தான். அதுவும் இந்த கொரோனா காலத்தில் நிறைய நடிகைகள் இன்ஸ்டாகிராம் லைவில் பேசினார்கள்.

Tamil Serial News, Pavithra Janani
ட்ரெண்டியான சேலையில்…

அந்த வகையில், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’ஈரமான ரோஜாவே’ மலருக்கும் ரசிகர்கள் ஏராளம். இவரது நிஜப்பெயர் பவித்ரா ஜனனி. சென்னையில் பிறந்து வளர்ந்த பவித்ரா, விஜய் டிவி-யில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் பிரபலமானார். அந்த சீரியலில் அவர் நடித்த துளசி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.  அதோடு, ‘கல்யாணம் முதல் காதல் வரை’, ‘பகல் நிலவு’, ’மெல்லத் திறந்தது கதவு’, ‘லட்சுமி வந்தாச்சு’ போன்ற சீரியல்களிலும் நடித்துள்ளார். தற்போது ’ஈரமான ரோஜாவே’ சீரியலில் முன்னணி பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

Tamil Serial News, Pavithra Janani
ஹோம்லி லுக்கில் பவித்ரா…

சிறு வயதிலிருந்தே டான்ஸ் ஆடுவது, நடித்துக் காட்டுவது, காமெடி செய்வது, பாட்டு பாடுவது என சுட்டிப் பெண்ணாக இருந்திருக்கிறார் பவித்ரா. விக்ரம் படங்கள் ஒன்று விடாமல் பார்க்கும் பவித்ரா, அவரை திரையில் பார்த்து நடிப்பில் நிறைய கற்றுக் கொண்டாராம். சிக்கன் பிரியாணி என்றால் ஒரு வெட்டு வெட்டும் பவித்ராவுக்கு வெள்ளையும், நீலமும் பிடித்த நிறங்கள்.

Tamil Serial News, Pavithra Janani
டிரடிஷனல் லுக்கில்…

சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த பவித்ராவுக்கு, சீரியலில் முழுநீள பெண் கதாபாத்திரம் கிடைத்ததற்கு, அவரின் விடா முயற்சியும், திறமையும் தான் காரணம். சிறு வயதிலிருந்தே டான்ஸ் ஆடுவது, நடித்துக் காட்டுவது, காமெடி செய்வது, பாட்டு பாடுவது என சுட்டிப் பெண்ணாக இருந்திருக்கிறார் பவித்ரா. விக்ரம் படங்கள் ஒன்று விடாமல் பார்க்கும் இவர், அவரை திரையில் பார்த்து நடிப்பில் நிறைய கற்றுக் கொண்டாராம். உணவு என்றால் அது சிக்கன் பிரியாணி தானாம். ஓய்வு நேரங்களில் தொலைதூர பயணம் போவது தான் பவித்ராவுக்கு பிடித்த விஷயமாம்.

 

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pavithra janani eeramana rojave malar vijay tv serials

Next Story
ஈஸியோ ஈஸி.. டேஸ்டியோ டேஸ்டி.. முட்டை தோசை!muttai dosai muttai dosa recipe in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com