பவித்ரா ஜனனி இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியலில் நடிக்கிறார். விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் இந்த சீரியல், ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
பவித்ரா ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்.
ஷூட்டிங் இல்லாத நேரங்களில் கொல்லிமலை, ஆகாய கங்கை, சதுரகிரி என பல இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். சமீபத்தில் கூட ஜெய்சால்மர் சென்றார்.
இப்போது பவித்ரா தன் தோழிகளுடன் சேர்ந்து தேனி, கொடைக்கானல், பூம்பாறை, மூணாறு ஆகிய இடங்களுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த படங்கள் மற்றும் அங்கு அருவியில் குளித்து விளையாடும் போது எடுத்த வீடியோஸை தன் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
பூம்பாறை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம். இங்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநிக்கு அடுத்தபடியாக இக்கோயிலில் நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. இக்கோயில் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்த அழகிய கிராமத்தின் வழிநெடுகிலும் கேரட்,பூண்டு, அரிய வகை பழ மரங்கள் என மூலிகை வாசத்துடன் நம்மை கட்டி இழுக்கும். மாலை நேரத்து பனிகாற்று, சலசலக்கும் சிறிய அருவிகள் என நீங்கள் கண்டுரசிக்க இங்கு ஏராளமாக உள்ளது.
மூணாறு
/indian-express-tamil/media/media_files/3a0M204HiyF5pymCSVds.jpg)
மலையேற்றப் பாதைகள், பரந்த தேயிலைத் தோட்டங்கள், கன்னி காடுகள், உருளும் மலைகள், நீர்வீழ்ச்சிகள் மற்றும் ஏராளமான இயற்கை அழகுக்காக சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படும் சொர்க்க மலை வாசஸ்தலம்.
மூணாறைச் சுற்றிலும் உள்ள அணைகளில் படகுசவாரி, பசுமையான பள்ளத்தாக்கு, பூங்கா, மலையேற்றம், நீர்வீழ்ச்சி போன்ற பொழுது அம்சங்களும் அதிகம் உள்ளன.
இதையும் படிங்க: எங்கும் பனிமூட்டம், பச்சை காடுகள்: மூணாறுல பார்க்க நிறைய இருக்கு
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“