“எனக்கு க்ளியர் ஸ்கின் இல்லை, ஆனா…” –  பவித்ரா லட்சுமியின் சரும பராமரிப்பு சீக்ரெட்ஸ்

Pavithra Lakshmi skincare secrets ஆல்கஹால் இல்லாத டோனர் வாங்குவது சிறந்தது. அதற்கு பெஸ்ட் ஆப்ஷன் ரோஸ் வாட்டர்.

Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral Pavithra Lakshmi Photoshoot Tamil News
Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral

Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral Tamil News : மாடல், நடிகை, டான்சர் எனப் பன்முகத் திறமையாளரான பவித்ரா லட்சுமி, விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் செம்ம பிசி. சமீபத்தில் புடவையை வெட்டியபடி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. இந்நிலையில் பவித்ரா லட்சுமி சரும பராமரிப்பு டிப்ஸ்களை தன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral Pavithra Lakshmi Photoshoot Tamil News
Pavithra Lakshmi Viral Photoshoot

“எனக்கு க்ளியர் ஸ்கின்லாம் இல்லை. நானும் மனுஷிதானே எனக்கும் பருக்கள் மற்றும் வடுக்கள் இருக்கு. ஆனா, அதுக்குலாம்தானே மேக்-அப் இருக்கு!” என ஆரம்பிக்கும் பவித்ரா சரும பராமரிப்பு டிப்ஸ் மட்டுமில்லாமல் மேக்-அப் போடுவதற்கு முன்பு என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் பகிர்ந்துகொண்டார்.

Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral Pavithra Lakshmi Photoshoot Tamil News
Cooku with Comali viral Pavithra Lakshmi

“தினமும் முகம் கழுவிய பிறகு டோனர் பயன்படுத்தலாம். மார்க்கெட்டில் ஏராளமான டோனர்கள் ஆல்கஹால் நிறைந்து வருகின்றன. எனவே, டோனர் வாங்குவதற்கு முன்பு ஆல்கஹால் இல்லாத டோனர் வாங்குவது சிறந்தது. அதற்கு பெஸ்ட் ஆப்ஷன் ரோஸ் வாட்டர்.

Pavithra Lakshmi skincare secrets Cooku with Comali viral Pavithra Lakshmi Photoshoot Tamil News
Pavithra Lakshmi skincare secrets

டோனர் முகத்தில் செட் ஆனபிறகு, மாய்ஸ்ச்சரைசர் உபயோகிக்கலாம். மாய்ஸ்ச்சரைசர் தேர்விலும் என்னுடையது இயற்கையானதுதான். நான் கற்றாழை ஜெல் பயன்படுத்துவேன். அதிலும் கலப்படங்கள் நிரைய உள்ளன. பச்சை நிறத்துக்காக கலர்ஸ் சேர்த்து விற்கப்படுவதெல்லாம் இயற்கையானது அல்ல. எனவே, கற்றாழை ஜெல் தேர்விலும் கவனமாக இருக்கவேண்டும்.

இவ்வளவுதான் சரும பராமரிப்புக்காக நான் செய்வது. டோனர் மற்றும் ஜெல் பயன்படுத்தி 15 நிமிடங்களுக்குப் பிறகு, ஃபவுண்டேஷன், கன்சீலர் என மேக் பொருள்களை உபயோகிக்கலாம்” என்று ஆரோக்கியமான சரும பராமரிப்பு டிப்ஸ்களை மக்களோடு பகிர்ந்திருக்கிறார் பவித்ரா லட்சுமி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pavithra lakshmi skincare secrets cooku with comali viral pavithra lakshmi photoshoot tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com