கோதுமை பாயாசம் செய்வது எப்படி?

பண்டிகைகளில் கண்டிப்பாக இந்த பாயாசம் இடம் பெற்று வருவதைக் காணலாம்.

payasam recipe : பாயாசம் என்பது ஒரு சுவையான ரெசிபி மட்டுமில்லாமல் ஆரோக்கியமான ரெசிபியும் கூட.பாயாசத்தின் க்ரீமி தன்மையும், நறுமணமிக்க ஏலக்காயின் மணமும் எல்லோருக்கும் விருப்பமான ஒன்று.இதில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருக்கின்றது.

உடைத்த கோதுமையில் செய்யப்படும் பாயாசத்தில் உள்ள குறைந்த கலோரி உங்கள் டயட் பழக்கத்திலும் கண்டிப்பாக இடம் பெற்று விடும்.இந்த பாயாசம் குறைந்த கலோரியைக் கொண்டுள்ளதால் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கூட தாராளமாக உண்ணலாம்.

இந்த பாயாசத்தை கோதி ஹக்கி, ஸ்வீட் ஹக்கி, கோதி பாயாசம் என்று நிறைய பேர்களில் அழைக்கின்றனர்.இந்தியாவின் தென் மாநிலங்களில் நடைபெறும் பண்டிகைகளில் கண்டிப்பாக இந்த பாயாசம் இடம் பெற்று வருவதைக் காணலாம். குறிப்பாக கர்நாடகாவில் இது ஸ்பெஷல்.

தேவையான பொருட்கள்:

உடைத்த கோதுமை – 1 கப்

உலர்ந்த பழங்கள் (பாதாம் பருப்பு + முந்திரி 1 கப் நெய்

பருப்பு + உலர்ந்த திராட்சை பழங்கள்) – 8-10

1 கப் பால் – 1/2 பெளல் தண்ணீர்

2 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்

3 கப் பாப்பி விதைகள்

1 டேபிள் ஸ்பூன் ஏலக்காய் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் உடைத்த கோதுமையைப் போட்டு அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.பிறகு தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.

2. ஊற வைத்த உடைத்த கோதுமையை குக்கரில் இட்டு தண்ணீர் சேர்த்து பருப்பு வேகவைப்பது போல, 3 விசில் வரும்வரை வேகவிடவும்.

3. அதன் பின் பத்து நிமிடங்கள் வரை ஆறவிடுங்கள்.

4. கடாயை அடுப்பில் வைத்து கசகசாவை லேசாக வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

5.கடாயில், வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வரை வெல்லம் முழுவதுமாக கரையும் வரை சூடுபடுத்தவும்.

6. தேங்காய் துருவல் மற்றும் வறுத்த கசகசாவை சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைக்க வேண்டும்.

7. இந்த கொதித்துக் கொண்டிருக்கிற வெல்லப்பாகில் போட்டு, நன்றாகக் கலக்கவும்.

8. பின் மூடி மிதமான தீயில் 2-3 நிமிடங்கள் அந்த கலவையை வேகவிடவும். அதன்பின், வேகவைத்த உடைத்த கோதுமையையும் அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை நன்கு கிளறிவிடுங்கள்.

9. நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை ஆகியவற்றை அதனுடன் சேர்க்கவும். அதோடு இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிட்டு,பின் கடைசியாக பால் சேருங்கள். 5 நிமிடம் வரை கொதிக்க விட்டு பின் பரிமாறலாம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Lifestyle News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close