பாயாசம் இந்த டேஸ்டில் சாப்பிட்டு பாருங்க… சூப்பரா இருக்கும்!

எவ்வளவு நாள் தான் அர்சி, ஜவ்வரிசி, சேமியா பாயசமே சாப்பிடுவீங்க

payasam recipe tamil payasam in tamil
payasam recipe tamil payasam in tamil

Payasam recipe tamil, payasam in tamil: பாரம்பரிய தென்னிந்திய உணவு வகைகளில் பாயாசத்திற்கு ஓர் இடமுண்டு. தலை வாழை இலை போட்டு விருந்து வைக்கும் போது நிச்சயமாக பாயாசம் இல்லாமல் விருந்து முழுமையடைவதில்லை. தென்னிந்தியாவின் பாயாசத்தை வட இந்திய மாநிலங்களில் ‘கீர்’ என்று அழைப்பதுண்டு.

நூற்றாண்டுகளாக பாயாசத்தை வாழை இலையில் பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இன்றும் பல வீடுகளில் தயிர் சாதத்திற்கு முன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். எவ்வளவு நாள் தான் அர்சி, ஜவ்வரிசி, சேமியா பாயசமே சாப்பிடுவீங்க. ஒரு சேன்சுக்கு பீர்க்கங்காய் பாயசம் செய்து பார்க்கலாம் வாங்க.

Payasam recipe tamil : பாயாசம் செய்முறை!

பீர்க்கங்காயை தோல் சீவி, நன்கு கழுவி சிறுசிறு துண்டாக நறுக்கியபின், ஒரு துண்டை வாயில் போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் சில வகை காய் கசப்புத்தன்மையுடன் இருக்கும் (கசக்கும் காயை உபயோகிக்க வேண்டாம்). பிறகு அதை குக்கரில் வேக வைத்து மைபோல் அரைத்து, பால் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகுமளவு கொதிக்கவையுங்கள்.

பிறகு அதனுடன் கண்டென்ஸ்டு மில்க் மற்றும் ஃபுட் கலர் பவுடரையும் கலந்துவிடுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் பழத்தை நெய்யில் வறுத்துப் போடுங்கள். ஏலம் பொடி செய்ததையும் அதில் போடுங்கள். வேண்டுமென்றால் பிடித்தமான எஸன்ஸ் ஒரு சொட்டு விட்டு மிதமான சூட்டில் பரிமாறலாம்.விருந்தினர்கள் இது என்ன பாயாசம் என்று கண்டுபிடிக்க முடியாமல் திணறுவார்கள்.

‘;தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Payasam recipe tamil payasam in tamil payasam making video payasam tamil

Next Story
ஸ்நாக்ஸ், டிபன் எப்படி வேணும்னாலும் சாப்பிடலாம்: ஹெல்தி ராகி பணியாரம்!Ragi Paniyaram recipe, Healthy breakfast recipe in tamil, easy breakfast recipe in tamil, ragi recipes in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com