ஒரு முறை இப்படி பழ அல்வா செய்து பாருங்க. வெறும் 3 பொருட்கள் இருந்தால் இதை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
அரை கிலோ மஞ்சள் வாழைப் பழம்
200 கிராம் வெல்லம்
7 டீஸ்பூன் நெய்
கால் டீஸ்பூன் ஏலக்காய் தூள்
முந்திரி 8
செய்முறை: நன்றாக பழுத்த பழத்தை வெட்டிக்கொள்ளவும். இதை மிக்ஸியில் போட்டு அரைத்துகொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து வெல்லம் சேர்த்து நன்றாக கரைய வேண்டும். இதை தனியாக எடுத்து வைத்துகொள்ளுங்கள். தற்போது ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து, அதில் அரைத்த வாழைப் பழத்தை சேர்த்து கிளரவும். தொடர்ந்து வெல்ல பாகை சேர்த்து கிளர வேண்டும். கூடுதலாக நெய் சேர்த்து கொள்ளவும். தொடர்ந்து முந்திரி பருப்பை சேர்க்கவும். தனியாக நெய்யில் வறுத்து சேர்த்து கொள்ளவும். கடைசியாக இருக்கும் எல்லா நெய்யையும், இதில் கலந்து கொள்ளவும். தொடர்ந்து நன்றாக கிளரவும். சூப்பரான அல்வா ரெடி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“