/indian-express-tamil/media/media_files/2025/09/29/download-52-2025-09-29-15-33-39.jpg)
இந்த வேகமான உலகத்தில், வானமீட்ட கட்டிடங்களும் அதிவேக வாழ்கையும் நம்மை பல நோய்களுடனும், மருந்துகளுடனும் வாழும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது. இதை வாழ்வே தேவையா? என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இதற்கே மாற்றாக, இயற்கையுடன் அமைதியாக, எளிமையாக வாழும் இடங்களும் இன்னும் இந்த உலகில் உள்ளன. அந்த வகையில், இயற்கை அழகும் அமைதியும் நிறைந்த 12 அமைதியான இடங்களை பற்றி பார்க்கலாம்.
வைல்ட்போல்ட்ஸ்ரீட், ஜெர்மனி
ஜெர்மனியின் பவேரியாவில் அமைந்த ஓபரால்கோ மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகராட்சியாகும் இந்த கிராமம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சிகளில் பெற்ற சாதனைகளுக்காக, இது சிறப்பாகக் கவனிக்கப்படுகின்றது.
ஹால்ஸ்டாட், ஆஸ்திரியா
ஆஸ்திரியாவின் அப்பர் ஆஸ்திரியா மாநிலத்தில் உள்ள க்முண்டன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய நகரம் ஹால்ஸ்டாட். பழமையான காலத்தில் உப்பு உற்பத்திக்காக புகழ்பெற்ற இந்த நகரம், இன்று முக்கிய வரலாற்று மற்றும் பாரம்பரிய இடமாகக் கருதப்படுகிறது. இங்குள்ள ‘ஹால்ஸ்டாட் ஸ்கைவாக்’ என்ற உலகப் பாரம்பரியக் காட்சி சிறப்பாகக் காணப்படுகிறது. செயிண்ட் மைக்கேல் தேவாலயத்தில் உள்ள கலாச்சார நினைவிடத்தில், 1,200-க்கும் மேற்பட்ட மனித மண்டை ஓடுகள் காணப்படுகின்றன. நகரத்தின் அருங்காட்சியகத்தில் வெண்கல, இரும்பு யுகங்களுக்கு முந்தைய காலத்திலிருந்த கலைப்பொருட்கள், கருவிகள் மற்றும் ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த இடம் யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஷிரகாவா-கோ, ஜப்பான்
ஜப்பானின் கிஃபு மாகாணத்தில், ஓனோ மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறிய பாரம்பரிய கிராமம், காஷோ-சுகுரி எனப்படும் மரக்கட்டிட பாணியைக் கொண்டது. "ஷிரகாவா-கோ" என்ற பெயர், ஜப்பானிய மொழியில் ‘வெள்ளை நதி கிராமம்’ என்பதைக் குறிக்கிறது. இந்த கிராமம் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகப் பதிவு செய்யப்பட்டுள்ள முக்கியமான பண்பாட்டு இடமாகும்.
கீத்தோர்ன், நெதர்லாந்து
நெதர்லாந்தின் ஓவரிஜ்செல் மாகாணத்தில் அமைந்துள்ள இந்த கிராமம், ஆரம்பத்தில் பாதசாரிகளுக்கே உரியதாக இருந்தது. 1958ல் இயக்குனர் பெர்ட் ஹான்ஸ்ட்ராவின் "பேன்பேர்" திரைப்படம் இங்கு படமாக்கப்பட்டதையடுத்து இந்த ஊர் புகழ் பெற்றது. இக்கிராமத்தின் பழைய பகுதியில் சாலைகள் இல்லாது, போக்குவரத்து பெரும்பாலும் கால்வாய்கள் வழியாக படகுகள் மூலம் நடைபெறுகிறது; பின்னாளில் சைக்கிள் பாதை மட்டும் சேர்க்கப்பட்டது.
ரெய்ன், நார்வே
நோர்வேயின் நோர்ட்லேண்ட் கவுண்டியில் அமைந்துள்ள மோஸ்கெனெஸ் நகராட்சியின் நிர்வாகத் தலைமையகமாக இந்த மீன்வள கிராமம் செயல்படுகிறது. ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே, லோஃபோடன் தீவுக்கூட்டத்தில் உள்ள மோஸ்கெனெசோயா தீவில் அமைந்துள்ள இக்கிராமம், டிராம்சோ நகரத்திலிருந்து தென்மேற்கே சுமார் 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் இருக்கிறது.
கோமிக், ஹிமாச்சலப் பிரதேசம், இந்தியா
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி தெஹ்ஸிலில் அமைந்துள்ள இந்த சிறிய கிராமம், உலகின் மிக உயரத்தில் உள்ள வாகனம் செல்லக்கூடிய கிராமங்களில் ஒன்றாகும். 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி மக்கள் தொகை 130 (90 ஆண்கள், 40 பெண்கள்). இங்கு 500 ஆண்டுகள் பழமையான லுண்டப் செமோ கோம்பா என்ற புத்த மடம் உள்ளது.
கோல்மர், பிரான்ஸ்
வடகிழக்கு பிரான்சின் அல்சேஸ் பகுதியில் அமைந்துள்ள கோல்மர், ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மல்ஹவுஸுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய நகரமாகும். இது ஹாட்-ரின் துறையின் தலைநகரமும், அதன் அரோன்டிஸ்மென்ட்டின் துணைமாவட்டத் தலைமையுமாகும். இந்த நகரம், அதன் நன்கு பாதுகாக்கப்பட்ட பழைய நகரம், அழகிய கட்டிடக்கலை மற்றும் அருங்காட்சியகங்களுக்காகப் பிரசித்தி பெற்றது.
ஜூஸ்கார், ஸ்பெயின்
தென் ஸ்பெயினின் ஆண்டலூசியா தன்னாட்சி பகுதிக்குட்பட்ட மலகா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமும் கிராமமும் ஆகும். இது மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலே டெல் ஜெனல் பகுதியில் அமைந்துள்ளது. ஆண்டலூசியாவின் பிரசித்தி பெற்ற வெள்ளைக் கிராமங்களில் ஒன்றான இங்கு, பாரம்பரியமாக அனைத்து கட்டிடங்களும் வெள்ளை நிறத்தில் பூசப்பட்டிருந்தன.
அமிரிம், இஸ்ரேல்
வடக்கு இஸ்ரேலில் உள்ள ஒரு மோஷாவ் ஆகும் . கடல் மட்டத்திலிருந்து 550 மீட்டர் உயரத்தில் கலிலீ கடலை நோக்கிய ஒரு மலையில் அமைந்துள்ள இது, கரிம வேளாண்மை மற்றும் சைவ உணவைத் தழுவுகிறது. இங்கு பல வகையான சைவ உணவகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கோந்தோங், மேகாலயா, இந்தியா
மேகாலயாவின் கிழக்கு காசி மலைகள் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கிராமம், அழகான காட்சிகள் மற்றும் விசில் மொழி "ஜிங்ர்வாய் இவ்பே" பயன்படுத்தும் கலாச்சாரத்தால் பிரசித்தி பெற்றுள்ளது. ஒவ்வொரு பூர்வீகவாசிக்கும் தனித்துவமான விசில் தாலாட்டு பெயர் உண்டு, அதனால் இக்கிராமம் 'விசில் கிராமம்' என அழைக்கப்படுகிறது. இது ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் சிறந்த கிராமப் போட்டிக்கு இந்தியா பரிந்துரைத்தது.
யாங்சி, சீனா
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் இருக்கும் இக்கிராமம் 'குள்ளர்கள் கிராமம்' என்றும் அழைக்கப்படுகிறது. இக்கிராமத்தில் வசிப்பவர்களில் பாதிபேர் குள்ளர்கள்தான். இக்கிராமத்தில் குள்ளர்கள் அதிக அளவில் இருப்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை.
சியூலோ, இத்தாலி
இத்தாலியின் சார்டினியா பிராந்தியத்தில், நூரோ மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகராட்சியாகும். இதில் 970 மக்கள் வாழ்ந்து வருகின்றனர் மற்றும் 58.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. இந்த நகரம் உலகத்தில் நீண்ட காலம் வாழும் இடமாகும் என்ற பிரபலமான பெயரை பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.