பேரிக்காய் நாம் சாப்பிடுவதால், பல நன்மைகள் இருக்கிறது. இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இந்நிலையில் இதய ஆரோக்கியத்திற்கு, சுகர் நோய்யை கட்டுப்படுத்த, உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள உதவும். குடல் சமந்தமான நோய்களை குறைக்க உதவும்.
இதில் நார்சத்து உள்ளது. ஒரு பாதி அளவில் உள்ள பேரிக்காயில் 6 கிராம் நார்சத்து உள்ளது. இது மலச்சிக்கலை நீக்கும். மேலும் வயிறு பிரச்சனையை சீராக்கும்.
இதில் வைட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் தோற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். இதில் பொட்டாஷியம் உள்ளதால், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
ஆண்டி ஆக்ஸிடண்டான பிளாபாய்ட்ஸ், கரோடிநாட்ஸ் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். சர்க்கரை நோய்யில் உள்ளவர்கள் நிச்சயமாக இதை சாப்பிடலாம். ஆனால் பாதி அளவில் இருக்கும் பேரிக்காய்யை சாப்பிட்டால் போதுமானது.
இதில் 22 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. மேலும் தோலுடன் பேரிக்காய்யை சாப்பிடால் மட்டுமே அதிக அளவு நார்சத்து கிடைக்கும்.
பேரிக்காய் வைத்து நடைபெற்ற ஆய்வில் தினமும் 2 பேரிக்காய் வரை சாப்பிட்ட நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் குறைந்துள்ளது. இதனால் இதய நோய் ஏற்படாது. மேலும் உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு சரியான ஸ்நாக்ஸாக பேரிக்காய் இருக்கும். இதில் கொழுப்பு சத்து இல்லாததால் நாம் 2 பேரிக்காய் வரை சாப்பிடாலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“