Green Peas Good for Weight Loss: காய்கறிகள் என்றாலே நமது உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை வழங்கக்கூடியது. அதிலும் பட்டாணியில் அதிகளவு ஸ்டார்ச் அதாவது கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளது.
இது கலோரிகள் குறைந்த ஒன்று என்றாலும் இதில் நார்ச்சத்து, புரோட்டீன், விட்டமின் ஏ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. இது பார்ப்பதற்கு வடிவில் சிறியதாக இருந்தாலும் எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாக உள்ளது. இது பருப்பு வகையை சார்ந்தது. மேலும் இதில் மாங்கனீஸ், இரும்புச் சத்து, போலேட் மற்றும் தயமின் போன்ற
ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.
இதன் நன்மைகள்
பசியை தீர்க்கும் இதன் அதிகமான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் நமக்கு வயிறு நிறைந்த திருப்தியை கொடுக்கிறது. பசி மற்றும் உடல் எடை இழப்பிற்கு உதவுகிறது. சீரணத்தை மெதுவாக்கி பசியை போக்குகிறது.
இதய ஆரோக்கியம் மக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. இது இரத்த அழுத்தம் போன்றவற்றை தடுத்து இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. நார்ச்சத்தால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. சீரண சக்திக்கு உதவுதல் பச்சை பட்டாணி சீரண சக்திக்கு உதவுகிறது. குடலில் நல்ல பாக்டீரியாவை அதிகரித்து குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதன் நார்ச்சத்தால் மலச்சிக்கல் பிரச்சினையை போக்குகிறது.
சூப் வகைகள்
பொதுவாக, மக்கள் தங்கள் சூப்களில் பச்சை பட்டாணி மற்றும் உலர்ந்த
பட்டாணியை சேர்க்க விரும்புகிறார்கள், ஏனெனில் இது சூப்பிற்கு மேலும் சுவையை சேர்க்கும். கேரட் மற்றும் இலைகள் போன்ற உங்களுக்கு விருப்பமான பிற காய்கறிகளையும் சூப்பில் சேர்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.