ஒவ்வொருவரும் ஆப்பிளை வித்தியாசமாக சாப்பிடுவார்கள். சிலர் ஆப்பிளின் தோலை உரித்து துண்டுகளாக்கி சாப்பிடுவார்கள். சிலர் தோலுடன் சாப்பிடுவார்கள்.
நன்றாக கழுவிய தோல் நீக்கப்படாத ஆபிளை மட்டுமே நாம் தேர்வு செய்ய வேண்டும். ஆப்பிளின் தோலை நீக்குவதால் சில சத்துகளை நாம் இழக்க வேண்டி வரும் என்று கூறப்படுகிறது. ஆப்பிளின் தோலில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இந்நிலையில் இது நமது உடலை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.
இந்நிலையில் ஆப்பிளை நன்றாக கழுவ வேண்டும். குறிப்பாக இதில் பூச்சி மருந்து மற்றும் மெழுகு இருக்கும் அபாயம் உள்ளது. தோல் நீக்கப்படாத ஆப்பிளில் நார்சத்து உள்ளது. இதில் வைட்டமின்ஸ், ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இந்நிலையில் தேவையான சத்துக்கள் எல்லா தோலில்தான் உள்ளது.
ஆப்பிளின் தோலை ஜீரணிப்பதில் சிக்கல் உள்ளவர்கள், தோல் நீக்கிய ஆப்பிளை சாப்பிட வேண்டும்.
தினமும் ஒரு பாதி அளவில் உள்ள ஆப்பிளை நாம் சாப்பிட வேண்டும். உங்களால் முடிந்தால் 2 ஆப்பிள் வரை சாப்பிடலாம். இந்நிலையில் ஆப்பிளை மட்டுமே பழங்களில் தேர்வு செய்ய வேண்டும் என்பதில்லை மற்ற பழங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“