இந்த காயில் இப்படி துவையல் செய்யுங்க: டிபன், லஞ்ச்-க்கு ஒரே ரெசிபி

பீர்க்கங்காய் துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

பீர்க்கங்காய் துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Peerkangai Thuvayal.jpg

சுவையான பீர்க்கங்காய் துவையல் ரெசிபி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

இளம் பீர்க்கங்காய் – 2
துவரம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன் 
உளுத்தம் பருப்பு- 1 டேபிள் ஸ்பூன் 
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன் 
மிளகாய் வற்றல் – 4
புளி, உப்பு- பெருங்காயம்
எண்ணெய் – தேவையான அளவு 

தாளிக்க தேவையானவை  

Advertisment
Advertisements

தேங்காய் எண்ணெய்
கடுகு, உளுத்தம் பருப்பு – சிறிதளவு 

செய்முறை

முதலில் பீர்க்கங்காய் தோல் சீவி நறுக்கி கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்க தேவையான பருப்பு, மிளகாய் வற்றல், தேங்காய் துருவல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் பீர்க்கங்காய் துண்டுகளை சேர்த்து சிவக்க வறுத்து தனியாக வைக்கவும். 

இப்போது இவை ஆறியதும், உப்பு, புளி, பருப்புகளை முதலில் மிக்ஸி ஜாரில் போட்டு  2 சுற்று விட்டு பின் காயையும் போட்டு தேங்காய் சேர்த்து அரைத்து எடுக்கவும்.  இப்போது மீண்டும் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து துவையலில் சேர்க்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

 

 

 

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: