Advertisment

இந்த காய் வைத்து பொரியல் ஓ.கே; மொறு மொறு பஜ்ஜி கூட செய்யலாமாம்: இப்படி செய்து பாருங்க

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Peerkangai.jpg

மழைக்கு சூடான, சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

தேவையான பொருட்கள் 

பீர்க்கங்காய் – 2
கடலை மாவு – 1 கப்
சோள மாவு – 1 கப்
சீரகப்பொடி – 1 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை 

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வதற்கு முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிஅதனை வட்ட வட்டமாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, சீரகப் பொடி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசையவும். 

அதில் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது  அடுப்பில் கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், வட்டமாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால் சூடான மொறு மொறு  பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி. தேங்காய் சட்னி உடன் வைத்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

 

 

 

 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment