Advertisment

பீர்க்கங்காய் இருக்கா? அப்ப மொறு மொறு பஜ்ஜி இப்படி செய்யுங்க

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Beetroot recipes in tamil: how to make beetroot bajji recipe tamil

சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். 

Advertisment

தேவையான பொருட்கள் 

பீர்க்கங்காய் – 2
கடலை மாவு – 1 கப்
சோள மாவு – 1 கப்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு 

செய்முறை

பீர்க்கங்காய் பஜ்ஜி செய்வதற்கு முதலில் பீர்க்கங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.  பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, சீரகப்பொடி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வைக்கவும். பின்பு அதில் தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு சற்று கெட்டியாக கலக்கவும். 

இப்போது அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், வட்டமாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காயை பஜ்ஜி மாவில் போட்டு பிரட்டி, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான பீர்க்கங்காய் பஜ்ஜி ரெடி. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

 

Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment