/indian-express-tamil/media/media_files/Z9MmnQbjCLkholTO0Apz.jpg)
Yoga for strengthen weak pelvic
உடற்பயிற்சிகள் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். ஆனால் சில குறிப்பிட்ட உடற்பயிற்சிகள், பிரத்தியேக உடல் பாகங்களில் கவனம் செலுத்துகின்றன அல்லது சில வலிகளிலிருந்து நிவாரணம் அளிக்கின்றன.
உங்கள் இடுப்புத் தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளையோகா நிபுணர் ஜுஹி கபூர் இங்கே பகிர்ந்துள்ளார்.
இடுப்புத் தள தசைகளை வலுப்படுத்துதல், சிறுநீர்ப்பைக் கட்டுப்பாட்டை மேம்படுத்துதல் மற்றும் உடலின் சமிக்ஞைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதன் மூலம் சிறுநீர் அடங்காமையை நிர்வகிப்பதற்கு யோகா பயனுள்ளதாக இருக்கும், என்று கபூர் அந்த வீடியோவில் கூறினார்.
பலவீனமான இடுப்புத் தசை அறிகுறிகள் என்ன?
இருமல், தும்மலின் போது சிறுநீர் கசிவு, கீழ் முதுகு வலி மற்றும் உடலுறவின் போது வலி ஆகியன பலவீனமான இடுப்பு தசைகளின் சில அறிகுறிகள்.
கர்ப்பம், பிரசவம், உடல் பருமன் அல்லது வயதாவதால் உங்கள் இடுப்பு தசைகள் பலவீனமடையலாம். பலவீனமான இடுப்பு, உங்கள் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது, மேலும் தீவிர பலவீனம், தீவிர மருத்துவ நிலைமைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே வீடியோவில் நிபுணர் செய்து காட்டிய chair pose, boat pose, reverse table, bridge pose ஆகிய யோகா பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.
உங்களுக்கு இதில் ஏதேனும் அறிகுறிகள் இருந்தால், இந்த வீடியோவை டவுன்லோட் செய்து இந்த உடற்பயிற்சிகளை தினமும் செய்வதை உறுதி செய்யவும்.
மேலும், இதே போன்ற பிரச்சனைகள் உள்ள உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிரவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us