சட்டையில் விடாப்பிடியான இங்க் கறை… வீட்டில் இருக்கும் இந்த பொருள் போதும்; 10 நிமிடத்தில் மாயமாய் மறையும்!
துணிகளில் பேனா மை கறை பட்டுவிட்டால், அதை நீக்குவது பெரும் சவால். எவ்வளவோ முயன்றாலும் கறை போகாமல், பிடித்த ஆடையைத் தூக்கி எறியும் நிலைக்கு வந்துவிடுகிறோம். ஆனால், இனி கவலை வேண்டாம்.

துணிகளில் பேனா மை கறை பட்டுவிட்டால், அதை நீக்குவது பெரும் சவால். எவ்வளவோ முயன்றாலும் கறை போகாமல், பிடித்த ஆடையைத் தூக்கி எறியும் நிலைக்கு வந்துவிடுகிறோம். ஆனால், இனி கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை வைத்தே இந்த கறைகளை நீக்க ஒரு அற்புதமான வழி இருக்கிறது.
Advertisment
கறை படிந்த துணிகளை தூக்கி எறியும் முன், உங்களிடம் உள்ள ஒரு பழைய பல் துலக்கும் பிரஷை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த பிரஷில் நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் பற்பசையை கொஞ்சமாகத் தடவவும்.
எப்படி செய்வது?
பற்பசை (டூத்பேஸ்ட்) தடவிய பிரஷை எடுத்து, கறை படிந்த துணிப் பகுதியில் மெதுவாகவும், ஆனால் உறுதியாகவும் தேய்க்கத் தொடங்குங்கள். சுமார் 5 நிமிடங்கள் வரை தேய்க்கலாம். நீங்கள் தேய்க்கத் தேய்க்க, கறை படிப்படியாக மறையத் தொடங்குவதைக் கண்கூடாகக் காணலாம். தேய்த்த பிறகு, அந்தத் துணியை வழக்கம் போல் துவைத்து விடுங்கள். கறை முற்றிலும் மறைந்து, ஆடை சுத்தமாகி இருப்பதை பார்க்கலாம். துவைத்த பிறகு, துணியை வெயிலில் உலர்த்தி, இஸ்திரி செய்தால், கறை இருந்ததற்கான தடயமே இருக்காது.
Advertisment
Advertisements
உங்கள் வீட்டில் டூத்பேஸ்ட் இல்லை என்றால் கவலைப்பட வேண்டாம்! கறையை நீக்க டெட்டால் திரவத்தையும் பயன்படுத்தலாம். டெட்டால் சில துளிகளை கறையின் மீது விட்டு தேய்த்தாலும் கறை நீங்கும். இந்த எளிய குறிப்பை நீங்கள் வீட்டிலேயே முயற்சி செய்து, உங்கள் துணிகளில் படிந்த பேனா மை கறைகளை நிரந்தரமாக நீக்கலாம். இனி உங்கள் பிடித்த ஆடையைக் கறைக்காக இழக்க வேண்டியதில்லை.