நாம் 40வயதை தாண்டிவிட்டால், நமது எலிம்புகளின் வலிமை குறைய தொடங்கும், இந்நிலையில் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க சில உணவுகளை நாம் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
பால் பொருட்களான தயிர், பால், சீஸ் ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. இவை நமது எலும்பை ஆரோக்கியமாக ஆக்குகிறது. கால்சியம் சத்தால் நமது எலும்புகள் வலுப்பெற உதவும்.
கேல், கீரை, ப்ரோக்கோலி ஆகியவற்றில் கால்சியம் அதிகம். இதில் உள்ள வடிட்டமின் கே எலும்புகளின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் உதவுகிறது.
பேட்டி மீன்களான, சால்மன், மக்கரில், சார்டிநஸ் உள்ளிட்ட வற்றில் ஓமேகா- 3 பேட்டி ஆசிட் உள்ளது. இது எலும்பின் ஆரோக்கியத்திற்கு உதவும்.
சியாவிதைகள் இதில் அதிக அளவில் கால்சியம், மெக்னீஷியா, பாஸ்பரஸ் உள்ளது. இவை அனைத்தும் எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கும்.
பாதாமில் கால்சியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் இ உள்ளது. வலுவான எலும்புகள் அதிக காலம் நீட்டிக்க உதவுகிறது. சோயா பீன்சில் இருந்து செய்யப்படும் டோ ஃபூவை நாம் சாப்பிட்டால் எலும்பின் அடர்த்தி அதிகரிக்கும்
முட்டையில் வைட்டமின் டி உள்ளது. உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் உள்வாங்கிக்கொள்ள வைட்டமின் டி சத்து உதவுகிறது. இதனால் இது மிகவும் முக்கியமாகும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“