40 வயதிற்கு மேல் அதிக முடி உதிர்வு இருக்கா? தினமும் 3 மிளகு இப்படி சாப்பிடுங்க- டாக்டர் நித்யா
முடி உதிர்தல் பிரச்னையை கட்டுப்படுத்துவது எப்படி? அடர்த்தியான தலைமுடி வளர என்ன செய்ய வேண்டும்? எந்த வயது வரை முடி உதிர்வு பிரச்னை இருக்கும்? மீன்டும் உதிர்ந்த முடிகள் வளருமா? என்ன சிகிச்சை முறைகள் எடுக்க வேண்டும் என்று விளக்குகிறார் மருத்துவர் நித்யா.
முடி உதிர்தல் பிரச்னையை கட்டுப்படுத்துவது எப்படி? அடர்த்தியான தலைமுடி வளர என்ன செய்ய வேண்டும்? எந்த வயது வரை முடி உதிர்வு பிரச்னை இருக்கும்? மீன்டும் உதிர்ந்த முடிகள் வளருமா? என்ன சிகிச்சை முறைகள் எடுக்க வேண்டும் என்று விளக்குகிறார் மருத்துவர் நித்யா.
முடி உதிர்தல் பிரச்னையை கட்டுப்படுத்துவது எப்படி? அடர்த்தியான தலைமுடி வளர என்ன செய்ய வேண்டும்? எந்த வயது வரை முடி உதிர்வு பிரச்னை இருக்கும்? மீன்டும் உதிர்ந்த முடிகள் வளருமா? என்ன சிகிச்சை முறைகள் எடுக்க வேண்டும் என்று விளக்குகிறார் மருத்துவர் நித்யா.
Advertisment
தலைமுடி உதிர்தல்: வயது வித்தியாசமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எதிர்கொள்ளும் பிரச்னைதான் தலைமுடி உதிர்வு. 40 வயதை நெருங்கும் போது அதிகமாக தலைமுடி உதிர்வு பிரச்னையை ஆண்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் அதிக உடல் உஷ்ணம்தான். பொதுவாக அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னைதான் உடல்சூடு. அப்படி உடல் சூடு, ஹார்மோன் மற்றும் தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை தீராத ஒன்றாக உள்ளது. ரத்தத்தில் அதிகளவு நச்சுகள், ஹீமோகுளோபின் அளவு குறைந்து இருந்தாலும் தலைமுடி உதிர்தல் பிரச்னை இருக்கும் என்கிறார் மருத்துவர் நித்யா.
சிறுநீரகங்கள் தொடர்பான பிரச்னைஇருந்தாலும் தலைமுடி உதிர்தல் இருக்கும். உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றும் கிட்னி முக்கிய பங்காற்றுகிறது. அதில் எந்த பாதிப்புகள் இருந்தாலும் நிச்சயமாக தலைமுடி உதிர்தல் இருக்கும். கல்லீரல் தொடர்பான பிரச்சனைகள் இருக்கக்கூடிய நபர்களுக்கும் தலைமுடி உதிர்வு இருக்கும். தலைமுடியோ அல்லது தோலிலேயோ ஏதாவது பிரச்னை இருந்தாலும் உள் உறுப்புகளில் பாதிப்புகள் இருக்கும் என்றுதான் கருத வேண்டும். உடலில் நச்சுகள் அதிகளவில் இருக்கும்போது உடல் பருமன் பிரச்னையும் ஏற்படக் கூடும் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் நித்யா.
எளிய சிகிச்சை முறைகள்:
Advertisment
Advertisements
உடல் உள் உறுப்பிகள் வலிமையடையும்போதுதான் முடி உதிர்தல் பிரச்னை குணமாகும். அப்படி, உள் உறுப்புகள் வலிமையடைய எளிய சிகிச்சை முறைகள் குறித்து பார்ப்போம்.
1. ரத்த சுத்திகரிப்பு:
ரத்தத்தில் இருக்கக்கூடிய டாக்சின்கள் (கெட்ட கழிவுகள் அல்லது நச்சுகள்)-ஐ நீக்க வேண்டும்.அருகம்புல் சாறு மற்றும் நெல்லிக்காய் சாறு தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வருவதால், ரத்தத்தில் உள்ள நச்சுகளை முழுவதுமாக நீக்கி விடும்.
2. மிளகு கற்பம்:
ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகள் மட்டுமல்ல உடல் உறுப்புகளில் இருக்கக் கூடிய நச்சுக்கழிவுகளை அகற்ற வேண்டும். முடிவளர்ச்சி குறைவு, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகளுக்கு தலைப் பொடுகு, பங்கல் இன்பெக்ஷ்ன் முக்கிய காரணமாகும். இதனை குணப்படுத்த சிறந்தது மிளகு கற்பம்தான். 100 கிராம் அளவுக்கு மிளகு எடுத்து அதனுடன் அரை லிட்டர் அளவுக்கு பசும்பால் சேர்த்து, நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். பிறகு அதனை 3 நாட்கள் வெயிலில் உளர்த்தி எடுத்து மிக்சியில் நன்கு பொடியாக அரைக்க வேண்டும். 3 சிட்டிகை அளவுக்கு மிளகுபொடி எடுத்து அதனை தேனில் கலந்து சாப்பிடலாம். ஒருநாளைக்கு 3 மிளகு என்ற கணக்கில்கூட சாப்பிடலாம். தினமும் காலையில் உணவுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு இந்த மிளகு கற்பத்தை சாப்பிடலாம். இவ்வாறு தொடர்ந்து சாப்பிடும்போது, உடல் உள் உறுப்புகள் வலுவடையும். நச்சுக்கழிவுகள் வெளியேறும். நுரையீரலில் பல நாட்கள் இருந்த நெஞ்சு சலி நீங்கும். இதனால், உடல் முழுவதும் ஆக்சிஜன் பரவி முடிவளர்ச்சி அதிகரிக்கும் என்கிறார் மருத்துவர் நித்யா.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்..